WATCH THIS VIDEO FOR FULL SHORTCUT :



ஜனவரி ௦1 - உலகளாவிய குடும்ப தினம்

ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி 1ம் தேதியன்று ஒரு அமெரிக்காவில் உலகளாவிய அமைதி மற்றும் பகிர்வு தினமாக கொண்டாடப் படுகிறது.

[ SH : ஜானு அமெரிக்கா ]

 

ஜனவரி ௦1 -ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் [DRDO]  63வது நிறுவன தினம் கொண்டாடபட்டது.இது 1958 தொடங்கப்பட்டது .


ஜனவரி 02 - தேசிய சித்தா தினம்

நான்காவது சித்த மருத்துவ தினம் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான [மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்] 2021 ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அகத்தியர் - சித்த வைத்தியத்தின் தந்தை

ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்படுகிறது.

முதலாவது சித்தா தினம் 2018 ஜனவரி 4-ஆம் தேதி, அகத்தியர் கொண்டாடப்பட்டது.

[ SH : ஜனங்க 2வது  ]


ஜனவரி 04 - உலக  பிரெய்லி தினம்

பார்வையற்றோர் எழுத்து முறையைக் கண்டுபிடித்தவரான லூயிஸ் பிரெய்லி பிரான்ஸில் பிறந்த தினமான ஜனவரி 04 1809  ஆனது உலக பிரெய்லி தினமாக அனுசரிக்கப் படுகின்றது.

இது 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

[ SH : பார்வை தெரியாத ஜனங்க நல்லா ]


ஜனவரி 06 போரால் ஆதரவற்றோரானவர்களுக்கான உலக தினம்

போரினால்  ஆதரவற்றோர் ஆனவர்களின் உலக தினமானது ‘SOS Enfants en Detresses’ என்ற ஒரு பிரெஞ்சு அமைப்பினால் தொடங்கப் பட்டது.

[ SH : ஜனங்க ஆரூம் ]


ஜனவரி 09 - வெளிநாடு வாழ் இந்தியர்தினம்.

இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு:சுயசார்பு இந்தியாவிற்காக 
ஒத்துழைத்தல் (Contributing to Atma Nirbhar).மகாத்மா காந்தி இந்தியாவிற்கு வந்த நாள் 


ஜனவரி 10 - உலக இந்தி தினம்  

இந்தி மொழி சமஸ்கிருதத்திலிருந்து உருவானது, மேலும் அது தேவநாகரி எழுத்தில் எழுதப் பட்டுள்ளது.

உலகின் நான்காவது அதிகம் பேசப் படும் மொழிகளில் இந்தியும் ஒன்றாகும்.

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டதைக் குறிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

முதல் உலக இந்தி தினம் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் அனுசரிக்கப்பட்டது.

[ SH : ஜனங்க பத்தல ]


ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்  

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”தேசத்தைக் கட்டமைப்பதற்காக இளைஞர் சக்தியை வலுப்படுத்துதல்” [Channelizing Youth Power for Nation Building’]என்பதாகும்.

1985 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.

[ SH : ஜனங்க 12TH படிச்சா ]


ஜனவரி 14 - முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் தினம்

இத்தினமானது முன்னாள் ஆயுதப் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தை அனுசரிப்பதற்காகவும் மேலும் இந்திய ஆயுதப் படையில் பணியாற்றியவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது. இத்தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இது ஆரம்பத்தில் தற்காலிக போர் நிறுத்த தினம் எனப்பட்டது.

[ SH : ஜனங்க ஒரு நாளாச்சும் முன்னாள்  ]


ஜனவரி 15 - இராணுவ தினம்

இது அப்போதைய தலைமைத் தளபதியான கே எம் கரியப்பாவை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.

இவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று இந்திய இராணுவத்தின் முதலாவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியாவின் கடைசி ஆங்கிலேயத் தலைமைத் தளபதி பட்சர் என்பவராவார்.

கரியப்பா 1947 ஆம் ஆண்டுப் போரில் இந்தியப் படைகள் வெற்றி பெற்றிடச் செய்தார்.

5 நட்சத்திரத் தரவரிசை கொண்ட தளபதி என்ற பட்டத்தை வைத்திருந்த 2 இந்திய ராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவராவார்.இதில் மற்றொருவர் தளபதி (Field Marshal) சாம் மானேக்சா என்பவராவார்.

[ SH : ஜனங்க ஒருதடவையும் அஞ்சாமல் ]


ஜனவரி 23- பராக்கிரம திவாஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் பராக்கிரம திவாஸ் ஆக கொண்டாடப்படுகிறது.


ஜனவரி 24 - தேசியப் பெண் குழந்தைகள் தினம்  

இது குறைந்து வரும் குழந்தைப் பாலின விகிதத்தின் பிரச்சினை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு உகந்த நேர்மறையான சுற்றுச்சுழலை உருவாக்கும் நோக்குடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதன் கருத்துரு, ”பெண் குழந்தைகளுக்காக கல்வியை மாற்றியமைத்தல்[transforming education for girls] என்பது ஆகும்.

இந்தியாவானது 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 21 ஆம் தேதியில் தொடங்கி ஜனவரி 26 ஆம் தேதி வரை தேசியப் பெண் குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கின்றது.

பஞ்சாப் மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ”பெண் குழந்தைகள் மாதமாக” அறிவித்துள்ளது.

இது 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால்  தொடங்கப் பட்டுள்ளது.

[ SH : ஜனங்க பெண்குழந்தைகள் மதிப்பு 2 நாள்ல வரல ]


ஜனவரி 24 - சர்வதேசக் கல்வி தினம்  

இந்த ஆண்டிற்கான இதன் கருத்துரு, ”கோவிட்-19 தலைமுறைக்கானக் கல்வியை மீட்டெடுத்தல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல்[Recover and Revitalize Education for the COVID-19 Generation.]"

 என்பதாகும்.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு – 4 ஆனது 2030 ஆம் ஆண்டில் ”அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரம் கொண்ட கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்” என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குழந்தை உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தமானது 1989 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

2018 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்தை சர்வதேசக் கல்வி தினமாக ஏற்றுக் கொண்டது.


ஜனவரி 25 - தேசிய வாக்காளர்கள் தினம்

இது 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினத்தைக் குறிப்பதற்காக முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

இத்தினத்திற்கான கருத்துரு, ”நமது வாக்காளர்களை அதிகாரமளிக்கப்பட்டவர்களாக, விழிப்புடன் உள்ளவர்களாக, பாதுகாப்பான மற்றும் தகவல் தெரிந்தவர்களாக மாற்றுதல்[Making our voters Empowered, vigilant, safe and informed]என்பதாகும்.

[ SH : ஜனங்க 25 வயதுக்குள்ள வாக்காளர்களிக்க ]


ஜனவரி 25 - தேசிய சுற்றுலா தினம்

இந்தியாவின் தேசிய சுற்றுலா தினமானது ஜனவரி 25 அன்று அனுசரிக்கப்படுகின்றது.

உலக சுற்றுலா தின - செப்டம்பர் 27

[ SH : ஜனங்க 25 வயதுக்குள்ள தேசியத்த சுற்றனும் ]


ஜனவரி 26 - சர்வதேச சுங்க தினம்

இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”சுங்கங்கள் நிலையான விநியோகச் சங்கிலிக்காக  மீட்டெடுப்பு, புதுப்பித்தல் மற்றும் தாங்கு தன்மையை மேம்படுத்துதல்” [Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain] என்பதாகும்.

[ SH : ஜனங்க 2 ஆற கடந்து சுங்கதுக்கு ]


ஜனவரி 27 - உலக இனப்படுகொலை நினைவு தினம்  

இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பேரழிவின் சோகத்தை நினைவு கூரும் வகையில் ஜனவரி 27 அன்று இது ஒரு சர்வதேச நினைவு நாளாக அனுசரிக்கப் படுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "இருளில் வெளிச்சமாக இருங்கள்"" [be the light in the darkness]. என்பதாகும்.

[ SH : 2 வாரத்துல உலக ஜனங்க இனப்படுகொலை ]


ஜனவரி 30 - தியாகிகள் தினம் 

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது  


ஜனவரி 31 - உலக தொழு நோய் தினம்  

சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது.

தொழுநோயானது ஹன்சென் நோய் (Hansen’s disease) என்றும் அழைக்கப்படுகின்றது.

[ SH : ஜனங்க முட்டாள்தனமா தொழு நோய் வந்தவங்கள ஒதுக்கி  ]


ஜனவரி 11 - ஜனவரி 17 - தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்

2021 ஆம் ஆண்டில் இந்தியாவானது 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது. 2021 ஆம் ஆண்டில் 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு, ”உனது குடும்பத்தைக் காப்பதற்காக வேண்டி பாதுகாப்பாக இருSafe yourself to save your family ]’ என்பதாகும்.

முதன்முதலில் 1989 ஆண்டில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வானது  அனுசரிக்கப்பட்டது.


Post a Comment

Previous Post Next Post