உத்திரமேரூரில்
8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
4 அடி உயரமும், 2 அடி அகலமும் 8 கரங்களையும்
கொண்ட கொற்றவை சிலையை தொல்லியல்துறை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு
பொது விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது . ஜனவரி 28ஆம் தேதி இந்த ஆண்டு
தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில்
தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
தமிழக அரசின் புதிய தலைமைச்
செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் 47-ஆவது தலைமைச் செயலாளர்.
இதற்கு முன்னர் தலைமைச் செயலாளராக இருந்த க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக
நியமிக்கப்பட்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி ஊராட்சியில் பழையாற்றின்
குறுக்கே அமைந்துள்ள பாலத்திற்கு, 'லூர்தம்மாள் சைமன் பாலம்' எனப் பெயர் சூட்ட, தமிழக
அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சியில் இடம்பெற்ற, ஒரே பெண் தலைவர் லூர்தம்மாள்
சைமன்.
தமிழ் எழுத்தாளர் டொமினிக்
ஜீவா கொழும்பில் காலமானார். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் நடத்திய இதழ் 'மல்லிகை'
மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இண்டியன் ஆயில் (ஐஓபி) நாகப்பட்டினத்தில்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க இருக்கிறது.
‘ரூ.31,500 கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக்
டன் எண்ணெயை சுத்திகரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படும்.
2021 ஆம் ஆண்டு
தமிழகத்தில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பரிசுபெற்ற அலங்கார ஊர்தி
துறைகள் :
முதலிடம் : காவல் துறை & சுகாதாரத் துறை
இரண்டாமிடம் : ஊரக வளர்ச்சி &
ஊராட்சித் துறை
மூன்றாமிடம் : சுற்றுலா & தகவல் தொழில்நுட்ப துறை
சிறந்த காவல்நிலையங்களாக சேலம் ,திருவண்ணாமலை மற்றும் சென்னை கோட்டூர் காவல் நிலையங்கள் முறையே முதலிடம்
இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றது.
வாஷிங்க்டன் சுந்தர் சென்னை மாநகராட்சியின்
தேர்தல் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒரு கிரிக்கெட் வீரர்.
முன்னாள் சட்டமன்ற சபாநாயகரான பிஎச் பாண்டியனின் சிலையையும்
,மணிமண்டபத்தையும் திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மாதேவியில் உள்ள கோவிந்தப்பேரியில்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவர் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு
சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.
இவர் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
சுற்றுச்சூழல் ரீதியாக பாதிக்கப்படும் மூன்று பகுதிகளை தமிழ்நாடு
மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
அவையாவன
மதுரையில் அரிட்டாபட்டி,
திருநெல்வேலியில் வாகைகுளம் மற்றும்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.
பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டு (பொது ஆண்டிற்கு முன்) காலத்து தமிழ் பிராமி கல்வெட்டுகள் அரிட்டாபட்டியில் அமைந்துள்ள கழிஞ்சமலையில் காணப்படுகின்றன.
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியானது சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக (Eco-Sensitive Zones - ESZ) அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவானது கேரளாவில் உள்ள மேற்குத்
தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர்
விவரங்கள் :
மொத்த வாக்காளர்களின்
எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74
ஆயிரத்து 446.
இதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38
ஆயிரத்து 473
இதில் பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28
ஆயிரத்து 727
மூன்றாம் பாலித்தனவர் 7 ஆயிரத்து 246
தமிழகத்திலேயே அதிக
வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி
உள்ளது [ 6 லட்சத்து 94 ஆயிரத்து 845
வாக்காளர்கள் ]
தமிழகத்திலேயே குறைவான வாக்காளர்களைக்
கொண்ட சென்னை துறைமுகம் தொகுதி [ 1 லட்சத்து
76
ஆயிரத்து 272 ]
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க தில்லி அரசானது
தமிழ் அகாடமியை அமைத்துள்ளது.
மேலும் இது தில்லி தமிழ் சங்கத்தின் தற்போதைய உறுப்பினரான
N. ராஜாவை இந்த அகாடமியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் செம்மொழியாக வகைப்படுத்தப்பட்ட
முதல் மொழி தமிழ் ஆகும்.
டெல்லி அரசு ஏற்கனவே சமஸ்கிருதம், உருது, இந்தி, பஞ்சாபி,
மைதிலி மற்றும் போஜ்புரி மொழிகளுக்கான அகாடமிகளை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் ஜி.ஆகாஷுக்குப் பிறகு இந்த ஆண்டு கிராண்ட்
மாஸ்டரான இரண்டாவது இந்தியர் லியோன் ஆவார்.
புற்றுநோய் நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத் துறை இணைந்து
தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1,00,000 என்ற அளவிலான மக்கள்தொகையின் மீதான புற்றுநோயின்
நிகழ்வு விகிதமானது ஆண்களில் கண்டறியப் பட்டுள்ள 74.4 என்ற விகிதத்தைக் காட்டிலும்
அதிகமாக பெண்களில் 93.9 என்ற விகிதத்தில் உள்ளது.
இது உலகின் எந்தவொரு புற்றுநோய் பதிவகத்தாலும் மதிப்பிடப்
பட்ட அளவில் ஒரு மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
புற்றுநோய்கள் மீதான அதிகபட்ச புற்றுநோயின் நிகழ்வு விகிதமானது
(CIR - Crude Incidence Rate) ஆனது சென்னையிலும் (140.8), குறைந்த பட்ச அளவிலான விகிதமானது
கிருஷ்ணகிரியிலும் (48.5) காணப் பட்டுள்ளது.
சென்னையில் பெண்களுக்கு மத்தியில் காணப் பட்டுள்ள மார்பகப்
புற்றுநோயின் பாதிப்பானது நாட்டில் மிக அதிகமானதாகும் (1,00,000 பெண்களுக்கு 46.4).
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரியாஸ்தீன் எனும் மாணவர் க்யூப்ஸ்
இன் ஸ்பேஸ் எனும் உலகளாவிய ஒரு போட்டியில் கலந்து கொண்டார்.
அவரது 37 மிமீ அளவிலான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களான விஷன்
சாட் வி1 மற்றும் வி2 ஆகியவை உலகின் மிக இலகுவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோளாக இடம் பிடித்துள்ளது.
இந்தச் செயற்கைக் கோள் 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஆர்.பி. 6 என்ற ஒரு திட்டத்தின் கீழ் நாசாவின் சுழிய அழுத்தம் கொண்ட ஒரு ஆய்வு பலூன் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கியூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற ஒரு போட்டியை 11 முதல் 18 வயதுக்கு
உட்பட்ட மாணவர்களுக்காக நாசாவின் ‘ஐடூடுல் எடுயுங்க்’ (idoodle Eduinc) என்ற அமைப்பு
ஏற்பாடு செய்துள்ளது.
காவேரி நதியை வைகை நதியுடன் இணைப்பதற்காக வேண்டி கரூர் மாவட்டத்தின் மாயனூரிலிருந்து 255.60 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு
கால்வாயை அமைப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இந்த இணைப்புக் கால்வாயானது கரூர், திருச்சி, புதுக்கோட்டை,
சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும்.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குத் தாய் பாலூட்டல் மீதான கவனம்
– 2020 ஆம் ஆண்டின் அறிக்கை
தமிழ்நாட்டில் 34% குழந்தைப் பிறப்புகள் அறுவைச் சிகிச்சை
முறையின் மூலம் நிகழ்கின்றன.
இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த உச்ச வரம்பான 15% என்ற
அளவை விட அதிகமாகும்.
இது மற்ற இதர மாநிலங்களில் பதிவாகியுள்ள வேகத்தை விட மிகவும்
அதிகமானது ஆகும்.
மொத்த அறுவைச் சிகிச்சையில், 26% பொது சுகாதார நிலையங்களிலும்
51% தனியார் நிலையங்களிலும் நிகழ்கின்றன.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டல் என்ற மதிப்பெண்ணின்
அடிப்படையில் மற்ற மாநிலங்களிடையே தமிழ்நாடானது 10வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தத் தரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தினால் வழங்கப் பட்டுள்ளது
7வது உலகத் தமிழ்ப் பொருளாதாரக் கருத்தரங்கு மற்றும் மெய்நிகர்
உலகப் பொருளாதார மாநாடு 2020 ஆகியவை காணொலி வாயிலாக புதுச்சேரி முதல்வரான நாராயண சுவாமி
அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது.
Post a comment