கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 
alert-success

பொருள் :: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

அருஞ்சொற்பொருள் ::
முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
alert-success


பொருள் :: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

அருஞ்சொற்பொருள் :: கற்றதனால்-கல்வி பெற்றதனால்; ஆய-ஆகிய; பயன்-நன்மை; என்கொல்-என்னவோ; வால்அறிவன்-தூய்மையாகிய அறிவுடையவன், முற்றறிவு உடையன்; நல்-நல்ல; தாள்-அடி; தொழாஅர்-வழிபடமாட்டார், வணங்கார்; எனின்-என்றால்.


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
alert-success


பொருள் :: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

அருஞ்சொற்பொருள் :: மலர்மிசை-மலரின்கண்; ஏகினான்-நடந்தவன், சென்றவன், சென்றமர்ந்தவன், பரந்துள்ளவன், உலவவிடுபவர், விளங்குபவன், எழுந்தருளினவன், வீற்றிருந்தவன்; மாண்அடிசேர்ந்தார்--திருவடியை இடைவிடாது நினைந்தவர்; நிலமிசை-நிலஉலகின்கண்; நீடு-நெடிது; வாழ்வார்-நிலைபெற்றிருப்பார்.


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
alert-success

பொருள் :: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

அருஞ்சொற்பொருள் :: வேண்டுதல்-விரும்புதல்; வேண்டாமை-வெறுத்தல்; இலான்-இல்லாதவன்; அடி-தாள்; சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு, அடைந்தவர்க்கு; யாண்டும்-எக்காலத்தும், எவ்விடத்தும்; இடும்பை-துன்பம்; இல-இல்லை, உளவாகா.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
alert-success


பொருள் :: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

அருஞ்சொற்பொருள் :: இருள்-அறியாமை, மயக்கம்; சேர்-கலந்த; இரு-இரண்டு; வினையும்-வினைகளும்; சேரா-நெருங்கா; இறைவன்-கடவுள்; பொருள்-மெய்ப்பொருள்; சேர்-சேர்ந்த; புகழ்-புகழ் அல்லது பெருமை; புரிந்தார்-சொல்வார்; மாட்டு-இடத்து.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
alert-success


பொருள் :: ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

அருஞ்சொற்பொருள் :: பொறி-ஐம்பொறி, வாயில்-வழி;  அவித்தான்-பண்படுத்தியவன், பக்குவப்படுத்தியவன், அறுத்தவன், அழித்தவன்; பொய்-மெய் அல்லாதது; தீர்-நீங்கிய; ஒழுக்கநெறி-ஒழுக்கமுறை; நின்றார்-நின்றவர்; நீடு-நெடிது; வாழ்வார்-நன்கு வாழ்வார், நிலைபெற்றிருப்பவர்.


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
alert-success


பொருள் :: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

அருஞ்சொற்பொருள் :: தனக்கு-தனக்கு; உவமை-ஒப்பு; இல்லாதான்-இல்லாதவனது; தாள் சேர்ந்தார்க்கு--அடி அடைந்தவர்க்கு, இடைவிடாது நினைந்தவர்க்கு; அல்லால்-அன்றி; மனக்கவலை-மனத்தின்கண் நிகழும் துன்பம்; மாற்றல்-மாற்றுதல், நீங்குதல்; அரிது-அருமையானது, கடினம்.


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
alert-success


பொருள் :: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

அருஞ்சொற்பொருள் :: அற-அறமாகிய; ஆழி-கடல், சக்கரம், சுனாமி, படைக்கலம்; அந்தணன்-கடவுள், அந்தண்மை கொண்டவன் அதாவது மிகக் குளிர்ச்சி பொருந்தியவன்; தாள்-அடி; சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு; அல்லால்-அன்றி; பிற-பிறவாகிய; ஆழி-கடல்; நீந்தல்-நீந்தல், நீந்திக் கடத்தல்; அரிது-உண்டாகாது, கடினம்.


கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
alert-success

பொருள் :: கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

அருஞ்சொற்பொருள் :: கோள்இல்-கொள்ளுதல் இல்லாத , கொள்கை இல்லாத, குறிக்கோள் அற்ற; பொறியின்-பொறிபோல , குணம் இலவே-குணமில்லையே, பயனில்லையே; எண்குணத்தான்- எண்ணப்பட்ட குணங்களையுடையவன்; தாளை-அடியை; வணங்காத் தலை-வணங்காத தலைகள் 


பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
alert-success


பொருள் :: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

அருஞ்சொற்பொருள் ::
பிறவி-பிறப்பு, இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது; பெரும்-பெரியதாகிய; கடல்-கடல்; நீந்துவர்-நீந்துவார்கள்; நீந்தார்-நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; இறைவன் அடி சேராதார்-கடவுள் தாள் சென்றடையாதார், இங்கு கடவுளை இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.


Post a Comment

Previous Post Next Post