TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button
CLICK HERE/button
---------------------------------------------------------------------------------------------------------------------------
DOWNLOAD APP NOW : DOWNLOAD APP/download/button
[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]
1. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?
1757
2. இந்தியாவில்
முதலாவதாக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர்கள் யார்?
போர்த்துகீசியர்
3. ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை
முனையை சுற்றி இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டுபிடித்தவர் யார் ?
வாஸ்கோடகாமா
4. மேற்கு
கடற்கரைப் பகுதியில் போர்த்துக்கீசியர் கோவாவை எந்த ஆண்டு கைப்பற்றினர்?
1510
5. இந்தியாவில் இருந்த போர்த்துக்கீசியருக்கும் கிழக்கே
மலாக்கா, ஜாவா பகுதிகளுக்கும் இந்தியாவின் எந்த இடம் போர்த்துக்கீசியரின் அரசியல் தலைமையிடமானது?
கோவா
6. எந்த காலப்பகுதியில்
முகலாய பேரரசு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது ?
1600-1650
7. அக்பர் எந்த ஆண்டு ராஜஸ்தானையும் குஜராத்தையும் கைப்பற்றி
முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவு படுத்தினார் ?
1600
8. முகலாய
அரசு சூரத் நகரத்திற்கு எத்தனை ஆளுநர்களை நியமித்திருந்தது?
2
9. சூரத்தின்
ஓர் ஆளுநர் நகரை பாதுகாப்பதற்காக எந்த நதியின் அருகே கட்டப்பட்டிருந்த கண்காணிப்பு
கோபுரங்களில் பணியமர்த்தப்பட்டிருந்தார்?
தபதி
10. அக்பர்
காலத்தில் யாருடைய வழிகாட்டலில் பேரரசின் வருவாய்த்துறை நிர்வாக முற்றிலும் சீரமைக்கப்பட்டது
?
தோடர்மால்
11. எந்த ஆண்டு ஆங்கிலேயர் பம்பாய் தீவுகளைக் இந்தியாவிடமிருந்து
பெற்றனர் ?
1668
12. எந்த
ஆண்டு ஆங்கிலேயர் தங்கள் தலைமை இடத்தை பம்பாய் தீவுகளில் ஏற்படுத்தினர்?
1687
13. டச்சுக்காரர்கள் யாரிடமிருந்து பழவேற்காடு பகுதியை
பெற்றனர் ?
செஞ்சி நாயக்கர்கள்
14. யாரிடமிருந்து
ஆங்கிலேயர் சோழமண்டலக் கடற்கரையில் நிலத்தை பெற்று புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்?
தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர்
15. எந்த ஆண்டு ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்
?
1639
16. மராத்தியர்கள்
எந்த ஆண்டு சூரத்தை தாக்கினர் ?
1664 மற்றும் 1670 (சூறையாடப்பட்டது)
17. டச்சுக்காரர்கள்
பழவேற்காட்டில் இருந்து வெளியேறி தங்களின் தலைநகரை எங்கு மாற்றினர்?
நாகப்பட்டினம்
18. சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் , பாதுகாப்பு கருதி
தாங்கள் டச்சுக்காரர்களின் அல்லது ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக எந்த ஆண்டு
அறிவித்துக் கொண்டனர் ?
1750
19. முகலாயர்
காலத்தில் நெசவுத்தொழில் நாட்டின் எத்தனையாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது?
இரண்டாவது
20. சோழ
மண்டல பகுதி வண்ணம் பூசப்பட்ட எந்த துணி வகைக்கு பெயர்பெற்றது?
கலம்காரி
21. முகலாயர் , ஐரோப்பியர் காலத்தில் நாணயங்களின் தூய்மை
நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அறியவும் இருந்த பணம் மாற்றுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சராப்
22. ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்கு பணத்தை ரொக்கமாக
அனுப்புவதற்கு பதிலாக வணிகர்கள் பயன்படுத்திய பணமாற்று முறிக்கு(bills of
exchange) என்ன பெயர்?
உண்டி
23. சென்னை
மாகாணப் பகுதிகளில் 1678 முதல் 1750 ஆம் ஆண்டுகளுக்கு இடையே எத்தனை பஞ்சங்கள் ஏற்பட்டன?
10
24. வாஸ்கோடகாமா
தனது முதல் பயணத்தில் எத்தனை கப்பல்களில் எத்தனை நபர்களோடு வந்தார்?
3 கப்பல்கள் 170 நபர்கள்
25. வாஸ்கோடகாமாவிற்கு
எந்த அரசருடைய நட்புணர்வு கிடைத்தது ?
கள்ளிக்கோட்டை அரசர், சாமரின்
26. எப்போது
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வருகை தந்தார்?
மே 27 1498
27. எப்போது
வாஸ்கோடகாமா இந்திய சரக்குகளுடன் ஊர் திரும்பும் பயணத்தை மேற்கொண்டார் ?
ஆகஸ்ட் 29 1498
28. 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் யாருடைய தலைமையில்
போர்ச்சுக்கல் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது?
பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல்
29. எப்போது இரண்டாவது முறையாக வாஸ்கோடகாமா மீண்டும்
கள்ளிக்கோட்டை வந்தடைந்தார்?
அக்டோபர் 29, 1502
30. வாஸ்கோடகாமா எங்கு ஒரு சரக்கு கிடங்கை நிறுவினார்?
கொச்சி
31. வாஸ்கோடகாமா
எங்கு ஒரு சிறைச்சாலையை நிறுவினார்?
கண்ணூர்
32. போர்ச்சுக்கீசியரின்
முதல் ஆளுநர் யார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
33. நீலநீர்
கொள்கையை கடைபிடித்த போர்ச்சுகீசிய ஆளுநர் யார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
34. பிரான்சிஸ்கோ
டி அல்மெய்டாவிற்கு பின் போர்ச்சுகீசிய ஆளுநராக பதவி ஏற்றவர் யார் ?
அல்புகர்க்
35. இந்தியாவில்
போர்த்துகீசிய பேரரசைக் உண்மையில் நிறுவியவர் என அழைக்கப்படுபவர் யார் ?
அல்புகர்க்
36. அல்புகர்க் பிஜப்பூரின் எந்த அரசரை தோற்கடித்தார்?
யூசுப் அடில் கான்
37. அல்புகர்க்
எந்த ஆண்டு கோவாவை கைப்பற்றினார்?
1510
38. அல்புகர்க்
எந்த ஆண்டு ஆர்மசு துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்?
1515
39. எந்த
போர்ச்சுகீசிய ஆளுநர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த முயன்றார்?
அல்புகர்க்
40. 1534ல்
பசீனையும்,1537ல் டையூவையும் கைப்பற்றிய போர்ச்சுகீசிய ஆளுநர் யார்?
நினோ டா குன்கா
41. எந்த
ஆண்டு டாமன் துறைமுகம் இமாத்-உல்-முல்க் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது?
1559
42. எந்தப் போர்த்துக்கீசிய ஆளுநரின் காலத்தில் முகலாய
அரசர் அக்பர் குஜராத்திலுள்ள காம்பேவுக்கு வந்தார்?
ஆன்டானியோ டி நொரன்கா
43. எப்போது
ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் போர்த்துக்கல் நாட்டை கைப்பற்றி இணைத்துக்கொண்டார்?
1580
44. போர்த்துக்கீசியர் எந்த இடத்தை கருப்பர் நகரம் என
அழைத்தனர் ?
மயிலாப்பூர்
45. ஆங்கிலேயர்
எந்த இடத்தை கருப்பர் நகரம் என அழைத்தனர்?
ஜார்ஜ்டவுன்
46. தமிழ்
உரைநடையின் தந்தை என கருதப்படும் போர்த்துகீசியர் யார்?
இராபர்டோ டி நொபிலி
47. தமிழ்
அச்சுப் பதிப்பின் தந்தை என அழைக்கப்படும் போர்த்துகீசியர் யார்?
ஹென்ரிக்ஸ்
48. சேசு
சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் எந்த ஆண்டு கோவா வந்தார்
?
1542
49. போர்த்துக்கீசியர்
வழங்கும் பாதுகாப்பின் பெயர் என்ன?
கார்டஸ் (cartaz)
50. டச்சுக்காரரின்
முதல் பயணத்தை தென் கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டவர் யார்?
ஜேன் ஹீயுன் வான் லின்சோடென்
51. எந்த ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டது?
1602
52. அம்பாய்னா
படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
1623
53. டச்சுக்காரர்கள்
மலாக்காவை போர்த்துகீசியரிடமிருந்து எந்த ஆண்டு கைப்பற்றினர்?
1641
54. பழவேற்காட்டில்
டச்சுக்காரர்கள் கட்டிய பாதுகாப்பு கோட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜெல்டிரியா
55. டச்சுக்காரர்கள்
எந்த ஆண்டு தங்கள் அதிகாரத்தை மசூலிப் பட்டணத்தில் நிறுவினர் ?
1605
56. டச்சுக்காரர்கள்
பழவேற்காட்டில் எந்த ஆண்டு குடியேற்றங்களை நிறுவினார்?
1610
57. இந்தியாவுடன்
வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டிலேயே முயற்சி மேற்கொண்டனர்?
1527
58. எந்த
ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது ?
1664
59. பிரெஞ்சு
கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் யார் ?
பதினான்காம் லூயியின் நிதியமைச்சராக
இருந்த கோல்பெர்
60. எந்த ஆண்டு பிரெஞ்சு வணிகர்கள் ஆப்பிரிக்காவில் உள்ள
மடகாஸ்கரை அடைந்தனர்?
1602
61. இந்தியாவில்
இருந்த எந்த பிரெஞ்சு முகவர் அவுரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்று தங்களின் முதல்
நிறுவனத்தை டிசம்பர் 1668ல் அமைத்தார்?
பெர்பர்
62. நிதியமைச்சர்
கோல்பேர் யாருடைய தலைமையில் கப்பற்படையை அனுப்பிவைத்தார்?
ஜேக்கப் பிளான்குயிட் டி லா
ஹேய்
63. சாந்தோமில்
இருந்தும் மயிலாப்பூரில் இருந்தும் டச்சுக்காரர்களை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர்கள்
எந்த ஆண்டு வெற்றி பெற்றனர்?
1672
64. டச்சுக்காரர்களுக்கெதிராக
பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான எந்த உள்ளூர் ஆளுநரின் உதவியை பிரெஞ்சுக்காரர்கள்
நாடினர்?
செர்கான் லோடி
65. டச்சுக்காரர்கள்
எந்த சுல்தானோடு நட்பு கொண்டனர் ?
கோல்கொண்டா சுல்தான்
66. பிரெஞ்சுக்காரர்கள் குடியேறுவதற்கு பொருத்தமான இடம்
என புதுச்சேரியை வழங்கியவர் யார்?
செர்கான் லோடி
67. மடகாஸ்கரில்
நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின் புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் யார் ?
பிரான்சிஸ் மார்டின்
68. "நாங்கள்
கடந்து சென்ற கிராமப்புற பகுதி மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது .மிக அழகாகவும்
இருந்தது அரிசி ஏராளமாக காணப்பட்டது. எங்குநீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது"
என புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து தனது நாட்குறிப்பில் எழுதியவர் யார்?
பிரான்ஸிஸ் மார்ட்டின்
69. 1697இல்
புதுச்சேரியை டச்சுக்காரர்கள் கைப்பற்றியபின் எத்தனை ஆண்டுகள் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில்
புதுச்சேரி இருந்தது? ஆறு ஆண்டுகள்
70. எந்த
உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களுக்கு 1699ல் தரப்பட்டது
?
ரிஸ்விக் உடன்படிக்கை
71. ரிஸ்விக் உடன்படிக்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1697
72. பிரான்சிஸ்
மார்டின் எந்த ஆண்டு இறந்தார் ?
1706
73. பிரெஞ்சுக்காரர்கள்
எந்த ஆண்டு மாகியைப் பெற்றனர்?
1725
74. பிரஞ்சுக்காரர்கள்
1739ல் எந்த இடத்தைப் பெற்றனர் ?
காரைக்கால்
75. 1668-1745 காலகட்டத்தில் புதுச்சேரியின் மற்றுமொரு
சிறந்த ஆளுநராக
இருந்தவர் யார்?
பியரி பெனாய்ட் டூமாஸ்
76. நார்வே 1813 வரை எதனுடன் இணைந்திருந்தது?
டென்மார்க்
77. டேனிய கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கியவர் யார்
?
டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன்
78. எப்போது
டேனியக் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டது?
1616
79. எப்போது
கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடல் பயணத்தை மேற்கொண்டார்?
1618
80. எந்த
ஆண்டு டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்?
நவம்பர் 20,1620
81. டேனியர்கள்
வணிக முகாம்களை எங்கெங்கு அமைத்தனர்?
மசூலிப்பட்டினம், பாலசோர் ,ஹூக்ளி
ஆற்றின் அருகில் உள்ள பிப்லி
82. டேனிய
கிழக்கிந்திய கம்பெனி எப்போது கலைக்கப்பட்டது?
1648
83. டேனிய
கிழக்கிந்திய கம்பெனியை கலைத்தவர் யார் ?
நான்காம் கிறிஸ்டியன் மகன் பிரடெரிக்
84. இரண்டாவது
டேனிய கிழக்கிந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?
1696
85. எப்போது டென்மார்க்கில் இருந்து முதன்முதலாக இரண்டு
லூத்தரன் சமயப் பரப்பாளர்கள் வந்தனர்?
ஜூன் 6,1706
86. டேனியர்கள்
எந்த ஆண்டு அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர்?
1755
87. மலேரியா
நோயின் அச்சத்தால் எந்த ஆண்டு டேனியர்கள் அந்தமான் பகுதியை கைவிட்டனர்?
1848
88. எந்த
ஆண்டு செராம்பூர் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது ?
1839
89. எந்த
ஆண்டில் தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் விற்கப்பட்டன?
1845
90. டென்மார்க்கில்
இருந்து முதன்முதலாக வந்த இரண்டு லூத்தரன் சமயப் பரப்பாளர்கள் யார்?
பார்த்தலோமியஸ் சீகன்பால்கு,ஹென்ரிச் புலுட்சா
91. உள்ளூர்
மக்களை மதமாற்றம் செய்வதன்மூலம் கலகத்தை தூண்டுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு நான்கு
மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் யார்?
சீகன்பால்கு
92. "மற்றவர்கள் நலனில் அக்கறை கொள்வது என்பது மதம்
போதனையின் உட்பொருளாக உள்ளது" எனக் கூறியவர் யார் ?
சீகன்பால்கு
93. 1715
இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார் ?
சீகன்பால்கு
94. சீகன்பால்கும்
அவருடைய நண்பர்களும் சேர்ந்து எப்போது இன்றும் பயன்பாட்டில் உள்ள தேவாலய கட்டிடத்தை
கட்டினார்?
1718
95. சீகன்பால்கு
எப்போது இயற்கை எய்தினார்?
பிப்ரவரி 23, 1719
96. ஆங்கில
கிழக்கிந்திய வணிக நிறுவனம் யாரால் மேலாண்மை செய்யப்பட்டது?
ஒரு ஆளுநர் 24 இயக்குனர்கள் கொண்ட குழு
97. எந்த ஆண்டு இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் இந்தியாவுடன்
வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்?
1611
98. முதலாம்
ஜேம்ஸ் யார் மூலமாக முகலாய அரசரிடம் இந்தியாவுடன் வணிகம் செய்யும் அனுமதியைப் பெற்றார்?
வில்லியம் ஹாக்கின்ஸ்
99. குஜராத்தின் எந்த முகலாய ஆளுநர் ஆங்கிலேயருக்கு வணிக
உரிமைகளை வழங்கினார் ?
இளவரசர் குர்ரம்
100.
எந்த ஆண்டு சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேய
கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்து அதில் கோட்டையை கட்டிக் கொள்ளும் அனுமதியை வழங்கினார்?
1639
101. சென்னையில்
கட்டப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டை எவ்வாறு பெயரிடப்பட்டது?
புனித ஜார்ஜ் கோட்டை
102. இந்திய
மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு முதன்முதலாக பெற்ற நிலப்பகுதி எது?
சென்னை
103. எந்த
ஆண்டு அவுரங்கசீப் கோல்கொண்டாவை கைப்பற்றி கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ்
கொண்டுவந்தார்?
1687
104. எந்த
அரசர் திருமணத்தின்போது பம்பாய் திருமணக்கொடையாக
வழங்கப்பட்டது?
அரசர் இரண்டாம் சார்லஸ்
105. பம்பாய்
தீர்வு எந்த ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது?
1668
106. எந்த ஆண்டு சென்னை ஒரு மாகாணமாக உருவானது?
1684
107. 1688
இல் சென்னை எத்தனை உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக்
குழுவை கொண்ட நகராட்சி அரசை பெற்றிருந்தது?
1 மேயர், பத்து உறுப்பினர்கள்
108. முகலாய
அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநருமான யாரிடமிருந்து கம்பெனி சில
வணிக உரிமைகளை பெற்றிருந்தது?
ஷா சுஜா
109. எந்த
ஆண்டு வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர் வணிக உரிமைகளைப் பெற்றனர்?
1608
110. 1690
மேல் எந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனி தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது?
சுதநுதி
111. சுதநுதி பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
கல்கத்தா
112. எந்த
ஆண்டு கல்கத்தாவில் கோட்டை கட்டப்பட்டது?
1696
113. எந்த
ஆண்டு சுதநுதி, காளிகட்டா, கோவிந்தபூர் ஆகிய கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை கிழக்கிந்திய
கம்பெனி பெற்றது?
1698
114. கல்கத்தாவில்
கட்டப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையின் பெயர் என்ன ?
புனித வில்லியம் கோட்டை
115. 1698ல்
ஔரங்கசீப்பை சந்தித்த இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியமினால் அனுப்பப்பட்டவர் யார்?
சர் வில்லியம் நாரிஸ்
116. சுர்மன்
வணிக உரிமைகள் தொடர்பான அரசரின் ஆணையை யாரிடமிருந்து பெற்றார்?
பருக்சியார்
117. முதல்
கர்நாடகப் போரின் கால கட்டம் என்ன?
1746 -1748
118. ஆஸ்திரியா
அரசர் ஆறாம் சார்லஸ் எப்போது காலமானார்?
1740
119. ஆறாம்
சார்லசை தொடர்ந்து அரசு பதவி ஏற்றவர் யார்?
அவருடைய மகள் மரிய தெரசா
120. பிரஷ்யாவின்
மகா பிரடரிக் என அழைக்கப்படுபவர் யார்?
இரண்டாம் பிரடெரிக்
121. புதுச்சேரியின்
எந்த ஆளுநர் சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோரிசிடம் ஐரோப்பாவில் போர் மூண்டாலும் இங்கே
நடுநிலைமை காக்கும் படி கேட்டுக்கொண்டார்?
துய்ப்ளே
122. யார்
தலைமையிலான ஆங்கில கடற்படை இந்திய பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சு கப்பல்களை
கைப்பற்றியது?
பார்னெட்
123. பிரான்சின்
தீவின் ஆளுநராக இருந்த யார் தனது எட்டு பொருட்களுடன் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தார்?
லா போர்டோனாய்
124. யார்
தலைமையில் ஆங்கில கப்பற்படை தனது நான்கு கப்பல்களோடு பிரெஞ்சு கப்பல்களை எதிர்த்தது?
கேப்டன் பைடன்
125. கேப்டன்
பைடன் எப்போது நடந்த போரில் தோல்வியடைந்து கல்கத்தாவிற்கு பின்வாங்கினார்?
ஜூலை 6, 1746
126. பிரெஞ்சு கப்பல் படை சென்னையை எந்த ஆண்டு கைப்பற்றியது
?
1746 செப்டம்பர் 15
127. சென்னை ஆளுநர் மோர்ஸ் யாரிடம் உதவியை நாடினார்?
ஆற்காடு நவாப் அன்வாரூதீன்
128. அன்வார்தீன்
10 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையை யார் தலைமையின்கீழ் அனுப்பி வைத்தார் ?
மகன் மாபூஸ்கான்
129. ஆங்கில
கடற்படை எந்த தலைவரின் தலைமையில் புதுச்சேரியை கைப்பற்ற மேற்கொண்ட இரு முயற்சிகளும்
தோல்வியில் முடிந்தன?
பாஸ்கோவென்
130. ஐ
லா சபேல் உடன்படிக்கை எப்போது கையெழுத்திடப்பட்டது?
1748
131. பிரெஞ்சுக்காரர்
சென்னையை ஆங்கிலேயருக்கு திருப்பித் தருவதற்கு மாறாக எந்த இடத்தை பிரெஞ்சுக்காரர்களுக்கு
கொடுப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது?
வடஅமெரிக்காவில் உள்ள லூயிஸ்பர்க்
132. இரண்டாம்
கர்நாடக போரின் கால கட்டம் என்ன ?
1749- 1754
133. ஹைதராபாத்
நிஜாம் ஆசப்ஷா எப்போது மரணம் அடைந்தார்?
1748
134. ஹைதராபாத்
நிஜாமின் பேரன் முஜாபர் ஜங் அடுத்த நிஜாமாவதற்கு
உரிமை கொண்டாடியதை ஆதரித்தவர் யார்?
துய்ப்ளே
135. துய்ப்ளே
ஆற்காட்டில் யாருக்கு ஆதரவு அளித்தார் ?
சாகிப் சந்தா சாகிப்
136. கர்நாடகத்தில்
எப்போது ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார்?
1749
137. எப்போதும்
முஜாபர் ஜங்க் ஹைதராபாத் நிஜாமாக ஆக்கப்பட்டார்?
டிசம்பர் 1750
138. முசாபர்
ஜங்க் இறப்பிற்குப்பின் அவருடைய சகோதரரான சலபத் ஜங் என்பவரை அரியணை ஏற்றியவர் யார்?
பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி
139. இராபர்ட்
கிளைவ் எப்போது பிறந்தார்?
செப்டம்பர் 29, 1725
140. இராபர்ட்
கிளைவ் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் முதன் முதலில் என்ன பணியில் சேர்ந்தார்?
எழுத்தர் பணி
141. இராபர்ட் கிளைவ் முதல்முறை ஆளுநராக இருந்த பொழுது
என்ன போரில் வெற்றிபெற்று இந்தியாவில் ஆங்கிலேய பேரரசுக்கு அடித்தளமிட்டார்?
பிளாசிப் போர்
142. இரண்டாவது
முறையாக 1764 -1767 ஆளுநராக இருந்தபோது என்ன போரில் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர்
ஆட்சியை வலிமை கொள்ள செய்தார் ?
பக்சார் போர்
143. எந்த ஆண்டு புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது
?
1755
144. மூன்றாம் கர்நாடகப் போரின் கால கட்டம் என்ன?
1756-1763
145. எந்த
ஆண்டு பிளாசிப் போர் நடைபெற்றது ?
1757
146. வங்காள
நவாபால் கைதுசெய்யப்பட்ட 146 ஐரோப்பியர் ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டு 23 பேர்
மட்டுமே உயிர் பிழைத்த சம்பவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இருட்டறை துயர சம்பவம்
147. பிளாசிப்
போரில் சிராஜ்-உத்-தௌலாவிற்கு பதிலாக யார் வங்காள நவாப் ஆக்கப்பட்டார்?
மீர் ஜாபர்
148. மீர்
ஜாபருக்கு பதிலாக யார் நவாப்பாக ஆக்கப்பட்டார்?
மீர்காசிம்
149. பக்சார்
போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1764
150. அலகாபாத்
உடன்படிக்கை எப்போது ஏற்படுத்தப்பட்டது?
1765
151. அலகாபாத்
உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் யார்?
இராபர்ட் கிளைவ் & இரண்டாம்
ஷா ஆலம்
152. மூன்றாம்
கர்நாடகப் போர் காலகட்டத்தில் பிரெஞ்சு அரசு யாரை இந்தியாவில் உள்ள பிரெஞ்ச் படைகளுக்குத்
தலைமை தளபதியாக அனுப்பி வைத்தது?
கவுண்ட்-டி-லாலி
153. மூன்றாம்
கர்நாடகப் போரின் காலகட்டத்தின் போது சென்னையை முற்றுகையிஇருந்து சென்னையை விடுவிப்பதற்காக
கப்பற்படை யோடு இந்தியா வந்த ஆங்கிலேய ஜெனரல் யார் ?
ஜெனரல் பொகாக்
154. வந்தவாசிப்
போர் எப்போது நடைபெற்றது ?
1760 ஜனவரி
155. பாரிசு உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?
1763
156. பாரிஸ்
உடன்படிக்கையின்படி எந்த பகுதிகள் மீண்டும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கப்பட்டது?
புதுச்சேரி ,சந்தன்
நகர்
Post a Comment