TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] -  CLICK HERE/button

TNPSC 50,000+ MCQ TEST SERIES JUST @199 - 

 CLICK HERE/button

---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------

1.       வரலாற்று அறிஞர் எ.எல். பாஷம் (A.L. Basham) இந்தியாவை எவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்?

"அதிசயம் அதுதான் இந்தியா” (The wonder that was India)

2.       உலகளவில் இந்தியா எத்தனையாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழைமையான நாடாகும்?

ஏழாவது(7)

3.      இந்தியாவில் எத்தனை  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளது? 28மாநிலங்கள் மற்றும்9 யூனியன் பிரதேசங்கள்

4.      2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகைஎத்தனை கோடிக்கு மேல் உள்ளது?

121 கோடிக்கு மேல்.

5.      கங்கை நதிஎந்த ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் அறிவிக்கப்பட்டது?

2008

6.      இந்தியாவின்நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப்பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளை பெற்றுள்ள நதி எது?

கங்கைநதி

7.       எது இந்தியாவை ஆசியக்கண்டத்திலிருந்து பிரிக்கிறது?

இமயமலை

8.      மூன்று பக்கம் கடலாலும் ஒருபுறம் நிலப்பரப்பாலும் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை எவ்வாறு அழைக்கிறோம்?

தீபகற்ப நாடு

9.      ஆசியாவின் இத்தாலிஎன அழைக்கப்படும் நாடு எது?

இந்தியா

10.    மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற நிலப்பகுதியில் எந்த பயிர் அதிக அளவு விளைவிக்கபடுகிறது?

நெல்

11.     குஜராத்,மகாராஷ்டிரா பகுதியில் எந்த பயிர் விளைவிக்க படுகிறது?

பருத்தி

12.    பஞ்சாபில் அதிக அளவு பயிரிடப்படும் பயிர் எது?

கோதுமை

13.    மத்தியபிரதேசத்தில் அதிக அளவு பயிடப்படுவது எது?

பருப்பு வகைகள்.

14.    அஸ்ஸாமில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் எது?

தேயிலை.

15.    கர்நாடகாவில் எது அதிகமாகப் பயிரிடப்படுகிறது?

காபி.

16.    கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகையையும்  பெற்றிருந்தது என்று குறிப்பிடுபவர் யார்?

ஹெரடோட்டோஸ்ட்டஸ்(Herotototus)

17.    மழை குறைந்தஉயர் நிலங்கள் யாவை?

பீடபூமிகள்.

18.    கனிம வளங்கள் எந்த பீட பூமியில் அதிகமா காணப்படுகிறது?

சோட்டாநாக்பூர் 19)எந்த பீட பூமியில் தினைப் பொருட்களும் அதிக அளவு உற்பத்திசெய்யப்படுகிறது?

மாளவ பீடபூமி

 

19.    தக்காண பீடபூமியில் எவை அதிக அளவு பயிரிடப்படுகிறது?

பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும்.

20.   எந்த இந்திய இனம் ,காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் ஆகிய பகுதியில் காணப்படும்?

இந்தோ – ஆரிய இனம்.

21.    எந்த இந்திய இனம் தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளில் வாழும் ஆகும்?

திராவிட இனம்.

22.    எந்த இந்திய இனம் அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும்இனம் ஆகும்?

மங்கோலிய இனம்.

23.    எந்த இந்திய இனம் ஐக்கிய மாநிலங்கள், பீகார் பகுதிகளில் வாழும் இனம் ஆகும்?

ஆரிய-திராவிட இனம்

24.   வங்காளம், ஒட்டரதேசம் (ஒடிசா)பகுதியில் வாழும் இந்திய இனம் எது?

மங்கோல் -திராவிட இனம்.

25.    மராட்டியப் பகுதியில் வாழும் மக்கள் சிந்திய – வடமேற்கு எல்லைபுறத்தில் வாழும் எந்தஇன மக்கள் ஆவர்?

துருக்கிய– இரானிய இனம்

26.   இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்“ என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?

டாக்டர் வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்(Vincent Arthur Smith)

27.    எந்த பழங்குடியின மக்கள் தமிழகத்தின்தொன்மையின் அடித்தளமாக உள்ளனர்?

தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள்

28.     மனிதன், தமது உள்ளத்து  உணர்வுகளைப் பிறருக்கு உணர்த்த உதவும் மிகச்சிறந்த  கருவி எது?

மொழி

29.   மொழியை language is the vehicle of communication என்று குறிப்பிடுவர் யார்?

அபெர் குரோம்பி (Aber crombie).

30.   1961 ஆம் ஆண்டில்தோராயமாக எத்தனை மொழிகள் இருந்தன?

1650

31.    121 கோடி மக்கள், எத்தனைக்கு மேற்பட்ட மொழிகளை பேசி வருவதாக PLSI (People’s  Linguistic Survey of India) தெரிவிக்கிறது?

780மொழிகள்.

32.    ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பேசும் மொழிகள் எத்தனை உள்ளன?

 33

33.    எந்த மொழி வடஇந்திய மொழிகளின்தாயாகக் கருதப்படுகிறது?

சமஸ்கிருதம்.

34.   சமஸ்கிருதம் மற்றும் வடஇந்திய மொழிகளில் எந்த எழுத்து வடிவம் பயன்படுத்தப்படுகிறது?

தேவ நாகரி

35.    வடஇந்தியாவில் பேசப்படும் முதன்மையான மொழிகளாகும் எவை?

 இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, காஷ்மீரி,உருது மற்றும் வங்காளம்

36.   வடகிழக்கு இந்தியாவில் எந்த மொழிபேசப்படுகிறது?

அஸ்ஸாமி

37.    தென்னிந்தியாவில் பேசப்படும் முதன்மையான மொழிகள் யாவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

38.    இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?

22.

39.   வட இந்திய மொழிகள் பல எந்த குடும்பத்தைச் சார்ந்தவையாக உள்ளன?

இந்தோ- ஆரிய மொழி.

40.    இந்திய மக்கள் பெரும்பான்மையினர் பேசும் மொழிகள் யாவை?

பஞ்சாபி, சிந்தி, ஹிந்தி, உருது, குஜராத்தி, வங்காளம், ஒரியா காஷ்மீரி, சமஸ்கிருதம்

41.    பிரெஞ்சுமொழி எங்கு பேசப்படுகிறது?

பாண்டிச்சேரி

42.   போர்த்துக்கீசிய மொழி எங்கு பேசபடுகிறது?

கோவா.

43.   இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இன்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் (121.09 ),

79.80% -இந்துக்களும்,

14.23% -இஸ்லாமியர்களும்,

2.30%- கிருத்துவர்களும்,

1.72% -சீக்கியர்களும்,

0.07% -பௌத்தர்களும்,

0.37% -சமணர்களும்

44.   இந்தியாவில் தோன்றிய நான்கு சமயங்கள் யாவை?

இந்து சமயம், பௌத்த சமயம், சமண சமயம், சீக்கிய சமயம்

45.   மக்கள் தொகை அடிப்படையில் ஜம்மு - காஷ்மீரில் எந்த சமய மக்கள் அதிக அளவு வாழ்கின்றனர்?

இசுலாம் மக்கள்.

46.   அருணாச்சலப் பிரதேசம், சோரம், மேகாலயா  போன்ற வடகிழக்கு மாநிலங்களில் எந்த சமய மக்கள் அதிக அளவு வாழ்கிறார்கள்?

கிறித்துவ சமயத்தவர்

47.    பஞ்சாப்மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் சமயத்தவர் யாவர்?

சீக்கியர்கள்.

48.   உலகளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா எந்த இடத்தில்உள்ளது?

நான்காவது இடம்.

49.   பொருளாதாரத்தில் இந்தியா எந்த கொள்கையை பின்பற்றும் நாடக உள்ளது?

கலப்புப்பொருளாதாரக் கொள்கை.

50.   ஆசியக் கண்டத்தின் மத்திய தென்பகுதியில் அமைந்த்துள்ள இந்தியா வடக்கு தெற்காக எத்தனை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது?

3214 கிலோ மீட்டர் .

51.    கிழக்கு மேற்காக எத்தனை கிலோ மீட்டர் அகலம் கொண்டுள்ளது?

 2933 km

52.    ‘ஹிந்த்‘ என்ற பெயர் எந்த பி நதியின்பெயரிலிருந்து பெறப்பட்டது?

சிந்து

53.    கிரேக்கர்கள் முதன்முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும்  பகுதி என்பதால் இத்துணைக் கண்டத்தை எவ்வாறு அழைத்தனர்?

சிந்து

54.   இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை எவ்வாறு அழைத்தனர்?

 ‘ஹிந்துஸ்தான்’

55.    வடஇந்தியாவையும், தென்னிந்தியாவையும்விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் பிரித்தாலும் இந்தியாவைப் எவ்வாறே வழங்குகிறோம்?

பாரதக் கண்டம்

56.   அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று ஜவஹர்லால் நேரு தான் எழுதிய எந்த நூலில் கூறியுள்ளார்?

 'Discovery of India' .

57.     புத்தபூர்ணிமாவை கொண்டாடும் சமயத்தவர் யாவர்?

பௌத்தர்கள்.

58.    மகாவீர்ஜெயந்தி கொண்டாடும் சமயத்தவர் யாவர்?

சமணர்கள்.

59.   குருநானக்ஜெயந்தியை கொண்டாடும் சமயத்தவர் யாவர்?

சீக்கியர்கள்

60.   இந்தியா எதன் கருவூலமாகத் திகழ்கிறது?

இலக்கியங்கள்

61.    கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் பொங்கல் விழா எந்த பெயரில் கொண்டாட படுகிறது?

மகரசங்கராந்தி.,

62.   கேரளாவில் பொங்கல் (அறுவடை)பண்டிகை எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை.

63.   மத்திய பிரதேசத்தில்பொங்கல் (அறுவடை)பண்டிகை எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

லொஹரி.

64.   பஞ்சாபில் பொங்கல் (அறுவடை)பண்டிகை எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

பைசாகி.665)அசாமில் பொங்கல்(அறுவடை) பண்டிகை எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

போஹாலி பிஹு,

65.   வங்காளத்தில்  அறுவடை விழா எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

நபன்னா.

66.   யார்யாரால் எழுதப்பட்ட தத்துவ கோட்பாடுகள் இந்தியா முழுமைக்கும் பின்பற்றப்பட்டு வருகின்றன?

சங்கரர்,இராமானுஜர், கபீர், குருநானக் மற்றும் சைதன்யர்.

67.   ஆழ்வார்களின் பாடல் தொகுப்பு எது ?

நாலாயிரத்திவ்யப் பிரபந்தம்.

68.   பழங்கால தென்னிந்திய  கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகள் யாவை?

பல்லவர்காலத்து மாமல்லபுரச் சிற்பங்கள் ,காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்தபெருமாள் கோயில், தஞ்சை பீரகதீஸ்வரர்

கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.

69.   வடஇந்தியாவில் முதன்முதலாக எந்த கட்டட அமைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது?

ஸ்தூபி

70.   பழைமையான ஸ்தூபிகள் எங்கெங்கு காணப்படுகின்றன?

சாஞ்சி, சாரநாத்

71.    பாரசீகக்கட்டடப்பாணியில் எவை கட்டப்பட்டன?

மசூதி

72.    வடஇந்தியக் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகள் எவை?

பூரி ஜெகநாதர் கோயில், கோனார்க் சூரியனார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவதேவி கோயில், தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை.

73.    பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன?

அராபிக் மற்றும் பாரசீக மொழி

74.    ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னர் எந்த மொழிஇந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட்டது?

ஆங்கிலம்

75.    லிட்டன் பிரபு எழுதிய "The Secret Way "என்ற நூலைத் தமிழில்  'இரகசிய வழி' என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் யார்?

மனோன்மணியம் சுந்தரனார்.

76.   இராஜாராம்மோகன்ராய், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் தத்துவங்கள் எந்த மொழிகளில் மொழிபெயர்ப்பானது?

மேலை நாட்டு மொழிகளில்.

77.    திராவிட மொழி குடும்பம்எத்தனை பிரிவுகளை கொண்டுள்ளது?

3-தென்திராவிட மொழிகள், நடுத்திராவிடமொழிகள் வடதிராவிடமொழிகள்.

78.    தென் திராவிட மொழிகள் யாவை?

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.

79.    நடு திராவிட மொழிகள் யாவை?

தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, முண்டா.

80.   வட திராவிட மொழிகள் யாவை?

குரூக்,மால்தோ, பிராகுய்.

81.    இராஷ்டிரகூடர்கள் காலத்தில் கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் எது?

கவிராஜமார்க்கம்,

82.    விஜயநகரப்பேரரசு காலத்தில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியம்எது?'

ஆமுக்தாமால்யதா'

83.    இராமாயணம் வடமொழியில் யாரால் இயற்றப்பட்டது?

வால்மீகி

84.   ராமாயணம் இந்தியில் யாரால் இயற்றப்பட்டது?

துளசிதாசர்

85.    தமிழில் ராமாயணம் யாரால் இயற்ற பட்டது?

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

86.   தேசியப்பாடலாக உள்ள வந்தே மாதரம் யாரால் இயற்றபட்டது?

பக்கிம் சந்திர சட்டர்ஜி

87.    தேசிய கீதமாகஉள்ள ஜனகன மன என்ற பாடலை இயற்றியவர் யார்?

இரவீந்திரநாத் தாகூர்

88.   தேசியப் பறவை எது?

 மயில்

89.   தேசிய விலங்கு எது? பு

லி

90.   தேசிய மரம் எது?

ஆலமரம்

91.     சுதந்திர தினவிழா எப்போது கொண்டாடபடுகிறது?

ஆகஸ்ட்

92.   குடியரசுதினவிழாஎப்போது கொண்டாட படுகிறது?

ஜனவரி 26

93.   தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த தினவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?

அக்டோபர்2

94.   பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் விழாஎப்போது கொண்டாட படுகிறது?

November14.

95.   தேசிய இளைஞர் தினவிழா(விவேகானந்தர் பிறந்த நாள்) எப்போது கொண்டாட படுகிறது?

ஜனவரி12

96.   சமாதான வாழ்விற்கு அடிப்படையான பண்பு எது?

 சகோதரத்துவம் .

 


Post a Comment

Previous Post Next Post