1

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] -  CLICK HERE/button

TNPSC 50,000+ MCQ TEST SERIES JUST @199 - 

 CLICK HERE/button

---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------

1.       “ பண்பாடு என்ற சொல் , எந்த சொல்லில் இருந்து தோன்றியது?

பண்படு என்னும் தமிழ்ச் சொல்லில்

2.       பண்படுத்துதல் என்பதற்கு என்ன பொருள் ?

செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல்

3.      ‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்கு என்ன பொருள் ?

சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி (In conditions suitable for growth)

4.      " cultra" என்ற சொல்லின் ஆங்கில திரிபு எவ்வாறு கூறப்படுகிறது?

culture

5.      1937இல்‘Culture‘என்னும் சொல்லுக்கு இணையாக பண்பாடு  என்னும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியவர் யார்?

டி. கே. சிதம்பரநாதனார்

6.      Culture‘ என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு‘ என்னும் தமிழ்ச் சொல்லை டி. கே. சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் குறிப்பிடவர் யார் ?

 எஸ். வையாபுரியார்

7.       விழுமியங்களின் தொகுதியாக இருப்பது எது?

 

பண்பாடு

8.      பண்பாடு என்பதை நம் முன்னோர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர் ?

 சால்பு, சால்புடைமை, சான்றாண்மை .

9.      பண்பை ,‘‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்“ என்று கூறும் நூல்?

 கலித்தொகை,

10.    “பண்புடையார்ப் பட்டுண்டு உலகு“ என்று பண்பை குறிப்பிடவர் யார் ?

 வள்ளுவர்.

11.      “மக்கள்தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச்  சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததேபண்பாடு“.- என பண்பாட்டை கூறுவது எது?

வாழ்வியற்களஞ்சியம்.

12.    “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின்மூலம் உடல், உள்ளம், உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு“- என பண்பாட்டை கூறுவது எது?

ஆங்கில அகராதி.

13.    “பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது“.என பண்பாடு பற்றி கூறியவர் யார்?

விவேகானந்தர்

14.    “பண்படுவது பண்பாடு.பண்படுதல் என்பது சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்டசெந்தமிழ் என்றும்,திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்.“ என  பண்பாடு பற்றி கூறியவர் யார் ?

தேவநேயப் பாவாணர்.

15.    “பண்பாடு என்பது, பொதுவாக நாகரிகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப்பெயர்பெறுகின்றது“என பண்பாடு பற்றி கூறியவர் யார்?

செ. வைத்தியலிங்கம்.

16.    “மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன். இந்நிலையில் அவன்அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு“.என பண்பாடு பற்றி கூறியவர் யார்?

ஈ. பி. டெய்லர்

17.    மக்களின் சிந்தனையும்,செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து  வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும் என பண்பாடு பற்றி கூறியவர் யார்?

ரூத் பெனிடிக்ட்.

18.    “அவரவர் அன்றாடப் பணிகளைநேர்மையான மனநிலையுடனும், நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

வால்டேர்.

19.    “பண்பாடு என்பது,இயற்கையின்மீதும் தன்மீதும்மனிதன்கொண்டிருக்கும் ,கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மிகம், மொழி,இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது“.என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

எல்வுட் மற்றும் பிரௌன்.

20.   “மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளஉருவாக்கிய கருவி பண்பாடு“.என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

சி. சி. நார்த்

21.    “ஒருவர் தம்குணநலங்களைநிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலங்களை பேணுவதிலும், பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

மேத்யூ ஆர்னால்டு.

22.    பண்பாடு என்பது, மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக்கொண்டே மக்கள் அவர்களின்தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

மாலினோசுக்கி.

23.    “பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின்சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது; உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது“என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

 ஆடம்சன் ஓபல்.

24.   “பண்பாடு என்பது, சீரிய வாழ்வுமுறை. இவ்வாழ்வுமுறை, மக்கள் நம்பிக்கைவைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால்  ஊக்குவிக்கப்படுகிறது“என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?

கே. எம். முன்ஷி.

25.    “தனிச் சிறப்புக்கூறுகள் நிறைந்த தனி இனச் சமுதாயத்தினரின் பண்புகளே பண்பாடு எனக் குறிப்பிடத்தக்கனவாகும்“ என பண்பாட்டை பற்றி கூறியவர்கள் யாவர்?

அமெரிக்க மானிடவியலாளர்கள்

26.   மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக்காட்டும் காலக் கண்ணாடியே இலக்கியம ஆதலால், காலத்தின் கோலத்தை அந்தந்தக்கால இலக்கியங்களில் காணலாம்" என்பது யாருடைய கூற்று.?

ஜி. ஈ. டெரெவெலியான்.

27.    இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை எவை?

வேதங்கள்.

28.    நான்கு வகையான வேதங்கள் யாவை?

ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.

29.   இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் எவை?

இராமாயணமும், மகாபாரதமும் ,

30.   வரலாற்றுச் சான்றுகளாகவும், பண்பாட்டுச் சான்றுகளாகவும்,  விளங்கும் இலக்கிய சான்று எது?

தருமசாத்திரங்கள்.

31.    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள எத்தனை  நூல்கள் அறக்கருத்துகளை வலியுறுத்துகின்றன?

11

32.    பெளத்தசமய இலக்கியங்கள் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளது ?

பாலி, பிராகிருதம்

33.    பௌத்த சமய நூல்களில் உள்ள முப்பிரிவுகள் யாவை ? சுத்தபீடகம்,விநயபீடகம்,அபிதம்மபீடகம்

34.   புத்தரின் அறிவுரைகளைக் கூறும் பௌத்த நூல் எது ?

சுத்த பீடகம்

35.    பௌத்த துறவிகளுக்கான சட்டதிட்டங்கள், ஞான ஒழுக்க முறைகள் ஆகியவற்றைப்பற்றிக் கூறும் பௌத்த நூல் எது?

விநய பீடகம்.

36.   புத்தரின்தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைக்கும் பௌத்த நூல் எது?

அபிதம்மபீடகம்

37.    பௌத்த சமயத்தின் பிற நூல்கள் எவை?

மிலிந்தபான்ஹா, லலிதவிஸ்தரா, வைபுல்ய சூத்திரங்கள், நேத்திபிரகர்ணம், பேதக உபதேசம் .

38.    தமிழ்நாட்டில் பௌத்தம் பரவி இருந்ததை கூறும் நூல் எது?

மணிமேகலை

39.   சமண நூல்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆகம சித்தாந்தங்கள்.

40.   சமண சமயம் எவ்வாறான இரு பிரிவாக பிரிந்தன?

சுவேதம்பரர், திகம்பரர்.

41.    தமிழில் எழுதப்பட்ட எந்தெந்த நூல்கள்சமணத்தின்  தத்துவங்களை அறிய உதவுகின்றன?

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்

42.   எட்டுத்தொகையுள் ஒன்றான எந்த நூலின்வாயிலாகத் தமிழர் திருமண முறைகளைப்பற்றி  அறிந்துகொள்ள முடிகிறது?

அகநானூறு

43.   ‘இலக்கியங்கள், காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியைக்காட்டும் காலக் கண்ணாடிகளாக  விளங்குகின்றன‘என்பது யாருடைய கூற்று ?

பேராசிரியர் சு.சக்திவேல்( ‘நாட்டுப்புற இயல் ஆய்வு‘)

44.   நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folkloreஎன்ற சொல்லை, உருவாக்கியவர் யார்?

வில்லியம் ஜான் தாமசு (1846)

45.   ‘பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) நாட்டுப்புறவியல்‘ என்பது யாருடைய கருத்து?

வில்லியம் ஜான் தாமசு.

46.   மக்களின் வாழ்க்கையில் தாலாட்டுப் பாடல்கள்முதல், ஒப்பாரிப் பாடல்கள்வரை, அனைத்து நிகழ்வுகளும் எவ்வகை பாடலில்  எதிரொலிக்கின்றன?

நாட்டுப்புறப் பாடல்கள்

47.    தொல்காப்பியர் குறிப்பிடும் ‘ பண்ணத்தி‘என்பது யாருடைய பாடல்களைக் குறித்தது?

பாமரர்

48.   கதையைப் பாடலாகப் பாடுவது எவ்வகை பாடல்?

கதைப்பாடல்.

49.   காப்பியங்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாகக் அமைந்தது எது?

கதைப்பாடல்கள்

50.   கதைப்பாடலுக்குத் தமிழில் உள்ள பெயர் என்ன ?

 அம்மானை

51.    எந்த நூலில் ‘அம்மானை‘ என்ற சொல் முதன்முதலாகக் கையாளப்பட்டுள்ளது?

சிலப்பதிகாரத்தில்.

52.    கதைப்பாடலின் நான்கு பகுதிகள் யாவை?

காப்பு or வழிபாடு, குரு வணக்கம், வரலாறு,வாழி .

53.    இறைவனை வழிபட்டுப் பாடலைத் தொடங்குவது  எவ்வகை கதை பாடல்?

காப்பு அல்லது வழிபாடு.

54.   தனக்குப் பாடம் சொன்ன குருவுக்கு வணக்கம் செய்து பாடுவது எவ்வகை பாடல்?

 குரு வணக்கம்.

55.    நடந்த நிகழ்வைக் கதைப்பாடலாகப் பாடுவது எவ்வகை கதை பாடல்?

வரலாறு.

56.   கதை கேட்போரும், மற்றோரும் கடவுளர் அனைவரின் அருளும் பெற்று வாழ்க என வாழ்த்துவது எவ்வகை கதை பாடல்?

 வாழி.

57.    சிறந்த கருத்தைச் சொல்வது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

பொன்மொழி.

58.    உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?

பழமொழி

59.   புராணங்கள் என்பது என்ன?

பண்டைய தொல்கதைகள்.

60.    ‘புராணக் கதைகள், தங்களை உருவாக்கிய முன்னோர்கள்  பற்றியும் பயன்படுத்துவோரைப் பற்றியும் கூறுகிறது‘ என புராணம் பற்றி கூறியவர் யார்?

ஈ.பி.டெய்லர்

61.    ‘ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர்உண்மையைக் கூற விழைகிறது என புராணம் பற்றி குறிப்பிடவர் யார்?

மாக்ஸ்முல்லர்

62.   புராணங்களில் இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகள்  எவ்வாறு வருவிக்கபடுகிறது?

வானத்தை ஆணாகவும், பூமியைப் பெண்ணாகவும், முழுநிலவை (பௌர்ணமி) வாழ்வின் குறியீடாகவும், மதிமறைவை (அமாவாசை) இறப்பின் குறியீடாகவும் கருதப்பட்டது .

63.   எதன்அடிபபடையில், ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்தி, இறைத்தன்மை பெறுவதை இந்திய பண்பாடு அறிவுறுத்துகிறது ?

ஆன்மீக அடிப்படை

64.   ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்‘என்பது யாருடைய வரிகள்?

திருமூலர்

65.   “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே“என்பது யாருடைய வரிகள்?

தாயுமானவர் .

66.   “மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்“ என்று எந்த வேதம் கூறுகிறது?

‘ரிக் வேதம்‘ .

67.   ஒருவர் மீது ஒருவர் செலுத்தும்  பாசமே -அன்பு எனப்படும். சத்தியம் என்பது -உண்மை எனப்படுகிறது. கொல்லாமை என்பதே    -அகிம்சையாகும்.

மன நிம்மதியே- சாந்தமாகும்.

பிறருக்கு  வறியவருக்கு உதவுதல்-அறம்,   ஈகை.

அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் ‘இரக்கமே‘ -கருணையாகும்.

68.   “யாதும் ஊரே யாவரும் கேளிர்“, என கூறியவர் ?

கணியன் பூங்குன்றனாரின்

69.   நாகரிகம் என்ற சொல் எந்த சொல்லின்  சொல்லடியாகப் பிறந்தது?

நகர்

70.   இந்திய மக்கள் அனைவரும் இனம், மொழி, சமயம், உணவு, உடை, பழக்கவழக்கம், வாழிடம், தொழில், விழாக்கள், வழிபாடுகள் போன்றவைவேறுபட்டாலும் எந்த உணர்வு அனைவரையும் ஒன்று சேர்கிறது?

"இந்தியர்"

71.    வாழ்வின் உறுதி பொருட்கள் யாவை?

அறம், பொருள், இன்பம், வீடு.

72.    எந்த கல்வி சமுதாய நிகழ்வுகளில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் ஆற்றலை தருகிறது?

பண்பாட்டுக் கல்வி. 

 

Post a Comment

Previous Post Next Post