TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button
TNPSC 50,000+ MCQ TEST SERIES JUST @199 -
CLICK HERE/button
---------------------------------------------------------------------------------------------------------------------------
DOWNLOAD APP NOW : DOWNLOAD APP/download/button
[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]
1. வேதம்
என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் என்ன ?
அறிவு
2. வேதம்
என்ற சொல்லானது எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
வித்
3. வித்
என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிதல்
4. பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது
எங்கு உள்ளது?
வடமேற்கு பாகிஸ்தான்
5. தட்சசீலத்தை
யுனெஸ்கோ எந்த ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது?
1980
6. சாணக்கியர்
தன் அர்த்தசாஸ்திரம் நூலை எந்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுகிறது?
தட்சசீலம்
7. பத்தொன்பதாம்
நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின்
இடிபாடுகளை எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்?
அலெக்சாண்டர் கன்னிங்காம்
8. பண்டைய காலத்தில் எந்த இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள்
மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்?
தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா
, வல்லபி,ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா
9. பண்டைய
காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை கற்றலின்
மையமாக இருந்தது?
கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல்
கிபி 12ஆம் நூற்றாண்டு வரை
10. நாளந்தா பல்கலைக்கழகம் எங்கு அமைந்திருந்தது ?
தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிரகம்
11. இஸ்லாமியர்கள் நிறுவிய தொடக்கப் பள்ளிகள் எவ்வாறு
அழைக்கப்பட்டது?
மக்தப்
12. டெல்லியில்
ஒரு மதராசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் யார்?
இல்துமிஷ்
13. இடைக்கால
இந்தியாவில் கல்வி முறையானது யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
உலோமா
14. ஜெய்ப்பூரை
சேர்ந்த எந்த ஆட்சியாளர் அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார்?
ராஜா ஜெய்சிங்
15. கியாசுதீன் மதராசா எங்கு உள்ளது?
டெல்லி
16. மௌலானா சத்ருதீன் மதராசா எங்கு உள்ளது?
ஷாஜகனாபாத்
17. ஸ்ரீராமானுஜர்,
ஸ்ரீரங்கத்தில் உள்ள எந்தக் மடத்திற்கு கல்விக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்?
அஹோபில மடம்
18. இந்தியாவில்
நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்
19. இயேசு சங்கத்தின் உறுப்பினரான யார் கொச்சியில் ஒரு
பல்கலைக்கழகத்தை தொடங்கினார்?
பிரான்சிஸ் சேவியர்
20. எந்த ஆண்டு கோவாவில் முதல் கல்லூரி தொடங்கப்பட்டது?
1575
21. யாருடைய இவஞ்சலிஸ்டிக் அமைப்பானது கிறிஸ்தவர் அல்லாத
குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப் பரப்பு அமைப்பாகும் ?
ஜான் கிர்னாண்டர்
22. 1812
ஆம் ஆண்டு யார் தரங்கம்பாடியில் 20 இலவசப் பள்ளிகளை நிறுவினார்?
டாக்டர் சி.எஸ்.ஜான்
23. யார் திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான
பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினர்?
ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு
மற்றும் புளூட்ச்சோ
24. எந்த
இடங்களில் சமஸ்கிருத கல்லூரிகள் துவங்கப்பட்டது ?
மதராஸ் மற்றும் பனாரஸ்
25. யார் ஒரு மிஷனரி கல்லூரியை கல்கத்தாவில் தொடங்கினார்
?
கல்கத்தாவின் முதல் பேராயர் டாக்டர் மிடில்டன்
26. கல்கத்தாவில்
மிடில்டன் அவர்களால் தொடங்கிய மிஷனரி கல்லூரி பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
பிஷப் கல்லூரி
27. வட்டார மொழி கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் யார்
?
மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்
28. எல்பின்ஸ்டன் கல்லூரி எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1827 ,பம்பாய்
29. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாறு
எத்தனை கட்டங்களாக பிரிக்கப்படுகிறது ?
நான்கு: ஆங்கிலேயர் ஆட்சியின்
ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம் ,1813 முதல் 1853 வரையிலான காலம், 1854 முதல்
1920 வரையிலான காலம், 1921 முதல் 1947 வரையிலான காலம்
30. கிழக்கிந்திய
கம்பெனியின் எந்த ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக்குறைந்த
அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது ?
1813
31. 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வியை
மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் எவ்வளவு ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச்
செய்தது?
ஒரு லட்சம் ரூபாய்
32. ஆங்கிலேயரின் செல்வாக்குமிக்க கல்வியின் மூன்றாம்
கட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகில இந்திய கல்விக் கொள்கையின் காலம்
33. சர் சார்லஸ் உட் கல்வி அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது
?
1854
34. எந்த
கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது?
ஹண்டர் கல்வி குழு
35. எந்த
ஆண்டில் ஹண்டர் கல்வி குழு ஏற்படுத்தப்பட்டது?
1882
36. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகாசாசனம் என்று
அழைக்கப்படுவது எது?
உட்ஸ் கல்வி அறிக்கை ,1854
37. எந்த ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண
சுயாட்சியை அறிமுகப்படுத்தி மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது?
1935
38. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கல்வி மேம்பாட்டிற்கான
மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?
1944
39. வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் யார் ?
மகாத்மா காந்தியடிகள்
40. வார்தா
கல்வி திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1937
41. சுதந்திரத்திற்கு பின் பல்கலைக்கழக கல்வி குறித்த
அறிக்கை தயாரிக்க 1948 ஆம் ஆண்டு யாருடைய தலைமையிலான கல்வி குழு நியமிக்கப்பட்டது?
டாக்டர் ராதாகிருஷ்ணன்
42. டாக்டர்
ராதாகிருஷ்ணன் கல்விக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி உயர் கல்வியின் தரத்தை நிர்ணயிக்க
எது அமைக்கப்பட்டது?
பல்கலைக்கழக மானியக்குழு
43. எந்த ஆண்டில் அமைக்கப்பட்ட இடைநிலை கல்வி குழு
,இடைநிலை கல்வித்துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும் ?
1952- 1953
44. இந்திய அரசு டாக்டர் டி எஸ் கோத்தாரி தலைமையில் ஒரு
கல்விக் குழுவை எந்த ஆண்டு நியமித்தது ?
1964
45. எந்த கல்விக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும்
இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியையும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி
அமைப்பையும் பரிந்துரை செய்தது ?
டாக்டர் டி எஸ் கோத்தாரி குழு
46. இந்தியாவின்
முதல் தேசியக் கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்பட்டது?
1968
47. முதல் தேசிய கல்விக்கொள்கை நோக்கமென்ன?
தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, பொதுவான
குடியுரிமை ,கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக்
கொண்டது
48. எந்த ஆண்டு இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது?
1986
49. 1986
ஆம் ஆண்டின் இந்திய அரசின் கல்விக்கொள்கையின் நோக்கம் என்ன?
ஒரு நிலையான சமுதாயத்தை மேம்பாட்டுடன்
கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்
50. புதிய
கல்விக் கொள்கை எந்த ஆண்டு மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது?
1992
51. எப்போது
வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது?
டிசம்பர், 1976 வரை
52. கல்வி தற்போது எந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளது
?
பொதுப்பட்டியல்
53. அனைவருக்கும் கல்வி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2000- 01
54. கல்வி உரிமைச் சட்டமானது எந்த வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும்
இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழிவகை செய்கிறது?
6 முதல் 14 வயது வரை
55. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் எந்த ஐந்தாண்டு
திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது?
பதினோராம் ஐந்தாண்டு திட்டம்
56. எந்த வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு தரமான ,எளிதில்
கிடைக்க கூடிய, எளிய அணுகுமுறையுடன் ,அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக்
கல்வியை அளிப்பதே இடைநிலைக் கல்வித் திட்டத்தின் நோக்கமாகும் ?
15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்கள்
57. சமமான
வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை அளவிடுதல் ஆகிய பள்ளியின் செயல் திறனை
மேம்படுத்துவதற்கான பரந்த குறிக்கோளை அடைய எது ஏற்படுத்தப்பட்டுள்ளது ?
சமக்ர சிக்ஷா
58. எந்த
ஆண்டு தேசிய கல்வி கொள்கை வரைவதற்கான ஒரு குழு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது
?
2017
59. மனிதவள
மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கல்விக் கொள்கை வரைவதற்கான குழு எந்த ஆண்டு
தனது அறிக்கையை சமர்ப்பித்தது?
2019
60. பண்டைய காலத்தில் இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டது?
பள்ளி
61. பண்டைய காலத்தில் இந்தியாவில் ஆசிரியர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்?
கணக்காயர்
62. பல்லவர்
காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
கடிகை
63. யாருடைய குறிப்புகள் காஞ்சி நகரமானது கற்றலின் மையமாக
விளங்கியதையும், காஞ்சியிலிருந்த புத்தசமயம் பற்றியும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது?
யுவான் சுவாங் என்ற சீன பயணியின்
குறிப்புகள்
64. தமிழிலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும்
புதுமைகளைப் புகுத்திய காலம் என அழைக்கப்படுவது?
சோழர்களின் காலம்
65. சோழர் காலத்தில் வேத கல்லூரிகள் இருந்த இடங்கள் என்னென்ன?
இராஜராஜன் சதுர்வேதிமங்கலம்,
திருபுவனை (பாண்டிச்சேரியில் உள்ளது)
66. சோழர்கள்
காலத்தின் எந்த கல்வெட்டு நூலகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது?
திருவிடைக்காளை
67. திருவாவடுதுறை
கல்வெட்டு யாருடையது?
வீரராஜேந்திர சோழன்
68. எந்தக் சோழர்களின்
கல்வெட்டு மருத்துவப்பள்ளி பற்றி குறிப்பிடுகிறது?
திருவாவடுதுறை கல்வெட்டு
69. பாண்டிய மன்னர்கள் எந்த மொழியை ஆதரித்ததை அவர்களின்
செப்புத் தகடுகளின் மூலம் அறியலாம்?
சமஸ்கிருதம்
70. பாண்டியர்களின்
காலத்தில் கல்வி நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
கடிகை ,சாலை மற்றும் வித்தியாசாதனம்
71. பாண்டியர் காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட
நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சாலபோகம்
72. எந்த
ஆட்சியின் போது திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது ?
நாயக்கர்கள் ஆட்சி
73. வீரப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்த யார் அங்கு
ஒரு தொடக்க பள்ளியை நிறுவினார் ?
பெர்னாண்டஸ்
74. எந்த ஆட்சியாளர் பண்டைய ஆவணங்களை சேகரித்து அவற்றை
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார் ?
மராத்திய ஆட்சியாளர் ,இரண்டாம்
சரபோஜி
75. இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரில் என்ன முறையிலான அச்சுக்கூடத்தை
அமைத்திருந்தார்?
தேவநாகரி எழுத்து முறை
76. நாட்டின் உயர் கல்வியின் முக்கிய மையமாக விளங்கியது
எது?
பிரதான்
77. மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில்
மிகப்பெரிய பங்கு எந்த மதராஸ் மாகாண ஆளுநரைச்
சேரும்?
சர் தாமஸ் மன்றோ( 1820-27)
78. மன்றோவின்
கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை முதன்மை பள்ளிகளை உருவாக்க பரிந்துரைத்தது?
இரண்டு: மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பள்ளிகள்
79. 1835
ஆம் ஆண்டு யார் மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றினார்?
வில்லியம் பெண்டிங் பிரபு
80. எந்த கல்வி அறிக்கை மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும்
துறையை (department of public instruction) ஏற்படுத்தியது?
1854 ஆம் ஆண்டில் சர் சார்லஸ்
உட் அறிக்கை
81. எந்த
ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது?
1857
82. ஆங்கிலேய ஆட்சியின்போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட
முதல் பல்கலைக்கழகம் எது?
சென்னைப் பல்கலைக்கழகம்
83. எந்த ஆண்டு உள்ளூர் வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1882
84. எந்த
ஆண்டுவாக்கில் பள்ளிகளில் ஆங்கில மொழி பாடம் தவிர அனைத்து படங்களும் தமிழ் மொழியிலேயே
கற்பிக்கப்பட்டன?
1938
85. எந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சிதம்பரத்தில்
அமைக்கப்பட்டது?
1929
86. எப்போது இடைநிலைக் கல்வி அளவில் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
1964-65
87. எந்த ஆண்டில் காந்திகிராம கிராமிய கல்லூரி
ஏற்படுத்தப்பட்டது?
1975
88. எந்த ஆண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
1956
89. மதிய உணவுத் திட்டம் எந்த ஆண்டு சத்துணவு திட்டமாக
விரிவுபடுத்தப்பட்டது?
1982
90. 1986
இல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது?
1992
Post a Comment