TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] -  CLICK HERE/button

TNPSC 50,000+ MCQ TEST SERIES JUST @199 - 

 CLICK HERE/button

---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------


1.       "பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது" என்றும் குறிப்பிடுபவர் யார்?

எட்வர்ட் பெயின்ஸ்

2.       எந்த முகலாய பேரரசின் ஆட்சியின் போது பெர்னியர் இந்தியாவிற்கு வருகை தந்தார் ?

ஷாஜஹான்

3.      எந்த வெளிநாட்டு பயணி இந்தியாவிலுள்ள மயிலாசனம் ,பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள் சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்?

 டவேர்னியர்

4.       டவேர்னியர் எந்த நாட்டுப் பயணி ?

பிரெஞ்சு நாடு

5.       மணி தயாரிக்க பயன்படும் உலோகமான வெண்கலத்திற்கு பெயர்பெற்ற இடம் எது ?

சௌராஷ்டிரா

6.       தகர தொழிற்சாலைக்கு புகழ் பெற்ற இடம் ?

வங்காளம்

7.        மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்ற இடம்?

டாக்கா

8.      கிமு 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் எந்த ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?

 மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள்

9.       இந்தியாவின் பழமையான தொழில் எது ?

நெசவுத் தொழில்

10.    செல்வ சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?

தாதாபாய் நௌரோஜி

11.     ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் ,இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதன் முதலில் ஏற்றுக் கொண்டவர் யார்?

தாதாபாய் நௌரோஜி

12.     பாரம்பரிய இந்திய கைவினைத் தொழில்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியவை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?

தொழில்மயமழிதல்

13.      எப்போது இந்தியாவில் தொழில் மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது ?

 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி

14.     நவீன தொழில் துறையின் தொடக்கமானது முக்கியமாக எந்த தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது ?

சணல், பருத்தி மற்றும் எஃகு

15.    எந்த ஆண்டில் அசாம் தேயிலை நிறுவனம் தொடங்கப்பட்டது?

 1839

16.     எந்த ஆண்டு மும்பையில் பருத்தி நூற்பு ஆலை நிறுவப்பட்டது?

 1854

17.      எந்த ஆண்டு கல்கத்தாவுக்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹீக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது?

 1855

18.      எந்த ஆண்டு முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது?

 1870

19.     எந்த ஆண்டு குல்டி என்ற இடத்தில் முதன் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது ?

1874

20.    இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை யாரைச் சேரும்?

ஜாம்ஷெட்ஜி டாடா

21.      எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டது?

 1907

22.    டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த ஆண்டு தேனிரும்பு உற்பத்தியை தொடங்கியது?

1911

23.      டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த ஆண்டு உலோக வார்ப்பு கட்டிகள் உற்பத்தியை தொடங்கியது?

 1912

24.   சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை எவ்வளவு கிலோமீட்டர் தூரமாக குறைத்தது?

 4830 கிலோமீட்டர்

25.    CII என்பதன் விரிவாக்கம் என்ன?

Confederation of Indian industry

26.   இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 1985

27.    எந்த ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழில் துறையில் நேரடியான பங்களிப்பினை செலுத்துகிறது?

 1948

28.     எந்த ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழில் துறையானது மூன்று வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது?

 1956

29.   எந்த அட்டவணையில் துறைகளான அணுசக்தி ,மின்னணு, இரும்பு மற்றும் எஃகு போன்ற சில தொழில் துறைகளை அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும்?

அட்டவணை 1

30.   சாலைகள் மற்றும் கடல் போக்குவரத்து ,இயந்திரக் கருவிகள் ,அலுமினியம், நெகிழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் ,இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை எந்த அட்டவணை தொழில்துறைக்குள் அடங்கும்?

அட்டவணை 2

31.     எந்த அட்டவணையின் கீழ் மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியவை அடங்கும்?

அட்டவணை 3

32.       மூலப் பொருட்களின் அடிப்படையில் தொழில்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?

வேளாண் அடிப்படையிலானவை மற்றும் கனிம அடிப்படையிலானவை

33.    தொழிலகங்கள் அவைகளின் பங்களிப்பின் படி எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?

அடிப்படை தொழில்கள் மற்றும் முக்கிய தொழில்கள்

34.    தொழில் உரிமத்தின் அடிப்படையில் தொழிலகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?

பொதுத்துறை ,தனியார் துறை மற்றும் கூட்டுறவுத்துறை

35.      எந்த தொழில்துறை வளர்ச்சி காலகட்டத்தின் போது பெருமையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன ?

 தொழில்துறை வளர்ச்சி (1950 -1965)

36.    எந்த ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதாகும் ?

 முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள்

37.     நுகர்வோர் பொருட்களின் துறை எந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்?

 கிராமப்புற பொருளாதாரம்

38.       எந்தத் தொழில்துறை வளர்ச்சியின் காலகட்டம் பின்னடைவு காலமாக கருதப்படுகிறது?

 தொழில்துறை வளர்ச்சி (1965- 1980)

39.    எந்த காலகட்டத்தை தொழில்துறையின் மீட்பு காலமாக கருதலாம் ?

தொழில்துறை வளர்ச்சி (1980 -1991)

40.   எந்த ஐந்தாண்டு திட்டங்கள் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தை கண்டன ?

 10 மற்றும் 11வது ஐந்தாண்டு திட்டங்கள்

41.     இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் எத்தனையாவது மிகப்பெரிய நாடாக உருவாக்கியுள்ளது?

மூன்றாவது

 

Post a Comment

Previous Post Next Post