TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS - CLICK HERE/button

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] -  CLICK HERE/button

TNPSC 50,000+ MCQ TEST SERIES JUST @199 - 

 CLICK HERE/button

---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------

 1.         ஆனந்தரங்கர் எங்கு மொழிபெயர்ப்பாளராக (Dubash) இருந்தார்?

பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகம்

2.       ஆனந்தரங்கர் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை இந்திய பிரெஞ்சு உறவுமுறை குறித்து அன்ற்டம் குறிப்புகள் எழுதியுள்ளார்?

 1736-1760

3.      வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆவணக் காப்பகம்

4.      இந்திய அரசின் ஆவணங்களை பாதுகாக்கும் முதன்மை காப்பகம் எது?

இந்திய தேசிய ஆவணக் காப்பகம்

5.      இந்திய தேசிய ஆவணக் காப்பகம் எங்கு உள்ளது?

புதுடெல்லி

6.      ஆசியாவில் உள்ள ஆவணகாப்பகங்களில் மிகவும் பெரியது எது?

இந்திய தேசிய ஆவணக் காப்பகம்

7.        இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்

8.      தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என அழைக்கப்படுவது எது?

சென்னை பதிப்பாசனம்

9.      தமிழ்நாடு ஆவணகாப்பகத்தில் எந்த ஆண்டைச் சேர்ந்த டச்சு பதிவுகளின் தொகுப்புகள் காணப்படுகிறது?

1642

10.    1642 டச்சு பதிவுகளின் தொகுப்புகள் எந்த இடங்களுடன் தொடர்புடையது?

 கொச்சி மற்றும் சோழ மண்டல கடற்கரை

11.     தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டச்சுப் பதிவுகள்  எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?

 1657-1845

12.    தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டேனிஷ் பதிவுகள்  எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?

 1777-1845

13.    யாருடைய பெரும் முயற்சியினால் "சென்னை நாட்குறிப்பு பதிவுகள்" வெளியிடப்பட்டது?

டாட்வெல்

14.    "சென்னை நாட்குறிப்பு பதிவுகள் " எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

 1917

15.     புனித டேவிட் கோட்டை எங்கு உள்ளது?

கடலூர்

16.     புனித பிரான்சிஸ் ஆலயம் எங்கு உள்ளது?

 கொச்சி

17.    புனித லூயிஸ் கோட்டை எங்கு உள்ளது?

பாண்டிச்சேரி

18.    புனித ஜார்ஜ் கோட்டை எங்கு உள்ளது?

சென்னை

19.    இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் எங்கு உள்ளது?

டெல்லி

20.    டெல்லி அருங்காட்சியகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?

1949

21.     நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக  திகழ்வது எது?

 நாணயங்கள்

22.     நவீன இந்தியாவின் முதல் நாணயம் எப்போது வெளியிடப்பட்டது?

கி.பி.1862 (ஆங்கிலேய ஆட்சியில்)

23.     இராணி விக்டோரியாவிற்கு பிறகு அரியணை ஏறிய யார் தனது உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார்?

மன்னர் ஏழாம் எட்வர்டு

24.   இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டு , இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தை பெற்றது?

1935

25.    இந்தியாவின் முதல் ஐந்து ரூபாய் நோட்டு யார் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?

மன்னர் ஆறாம் ஜார்ஜ்

26.   இந்தியாவின் முதல் ஐந்து ரூபாய் நோட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் எப்போது வெளியிடப்பட்டது?

1938

27.    புனித டேவிட் கோட்டை எந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது?

ஆங்கிலேயர்கள்

28.    புனித டேவிட் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

 1690

29.   துருக்கியர்களால் எந்த ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்டது?

 1453

30.   "மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுபவர் யார்?

போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி

31.    எந்த ஆண்டு போர்ச்சுகீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்?

1487

32.    போர்ச்சுகீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸை ஆதரித்தவர் யார்?

மன்னர் இரண்டாம் ஜான்

33.    வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை எந்த ஆண்டு அடைந்தார்?

 1498

34.   வாஸ்கோடகாமாவை வரவேற்ற மன்னர் யார்?

 சாமரின்

35.    வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி இந்தியா வந்த இரண்டாவது போர்த்துகீசிய மாலுமி யார் ?

 பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்

36.   பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் 13 கப்பல்களில் எந்த ஆண்டு கள்ளிக்கோட்டை வந்தடைந்தார் ?

 1500

37.    வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார்?

1501

38.    வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக கள்ளிக்கோட்டை வந்தபோது எங்கு ஒரு வர்த்தக அமைப்பை நிறுவினார் ?

கண்ணனூர்

39.    போர்ச்சுக்கீசியர் கண்ணனூரில் வர்த்தக மையத்தை நிறுவிய பின்னர் எந்தப்பகுதியில் வர்த்தக மையத்தை நிறுவினர்?

 கள்ளிக்கோட்டை, கொச்சின்

40.     சாமரின் மன்னரை தோற்கடித்த பின்னர் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் தலைநகரம் எது?

 கொச்சின்

41.    வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக எப்போது இந்தியாவிற்கு வந்தார்?

 1524

42.   வாஸ்கோடகமா எங்கு எப்போது மறைந்தார் ?

 டிசம்பர் 1524, கொச்சி

43.     இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆளுநர் யார்?

 பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

44.    பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா எப்போது இந்தியாவிலிருந்து போர்த்துகீசிய பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் ?

 1505

45.     இந்தியாவில் போர்ச்சுகீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே எந்த ஆளுநருடைய நோக்கமாக இருந்தது?

 பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

46.   பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா பின்பற்றிய கொள்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

 நீலநீர் கொள்கை

47.    போர்ச்சுக்கீசியர் மற்றும் முஸ்லிம் கூட்டுப்படைகள் இருவருக்குமிடையே எங்கு  கடற்படை போர் நடைபெற்றது?

 சாவலுக்கு அருகில்

48.    எங்கு நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லிம் கூட்டுப் படைகளை தோற்கடித்தார்?

 டையூ

49.   எந்த ஆண்டு போர்ச்சுகீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையை கோரினர்?

 1509

50.    இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் யார் ?

அல்போன்சா டி அல்புகர்க்

51.      அல்போன்சா டி அல்புகர்க் இந்தியாவில் யாரிடம் இருந்து கோவாவை கைப்பற்றினார் ?

பீஜப்பூர் சுல்தான்

52.     அல்போன்சா டி அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து எந்த ஆண்டு கோவை கைப்பற்றினார் ?

 நவம்பர், 1510

53.     அல்போன்சா டி அல்புகர்க் எந்த ஆண்டில் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுக பகுதியில் போர்த்துக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார் ?

1515

54.   இந்திய பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர் யார் ?

அல்போன்சா டி அல்புகர்க்

55.    அல்போன்சா டி அல்புகர்க் எந்த பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்?

 விஜயநகரப் பேரரசு

56.    அல்போன்சா டி அல்புகர்க்க்கு பிறகு கவர்னரானவர் யார்?

நினோ-டி-குன்கா

57.    நினோ-டி-குன்கா எந்த ஆண்டு தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்?

1530

58.      நினோ-டி-குன்கா எந்த ஆண்டு குஜராத்தின் பகதூர் ஷாவிடம் இருந்து பசீன் பகுதியை கைப்பற்றினர்?

1534

59.    நினோ-டி-குன்கா எந்த ஆண்டு டையூவை கைப்பற்றினார்?

 1537

60.   நினோ-டி-குன்கா எந்த ஆண்டு சால்செட்டை  ஆக்கிரமித்தார்?

 1548

61.     பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் மேற்குக் கடற்கரையில் இருந்த எந்த பகுதிகளை கைப்பற்றினர்?

கோவா ,டையூ, டாமன், சால்செட்,பசீன்,சௌல் மற்றும் பம்பாய்

62.    பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் கிழக்கு கடற்கரையில் இருந்த எந்த பகுதிகளை கைப்பற்றினர்?

வங்காள கடற்கரையில் உள்ள ஹீக்ளி, சென்னை கடற்கரையில்  உள்ள சாந்தோம்

63.    போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் என்ன சாகுபடியை அறிமுகப்படுத்தினர்?

 புகையிலை சாகுபடி

64.    போர்ச்சுகீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

1556

65.     அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் எந்த ஆண்டு கோவாவில் " இந்திய மருத்துவ தாவரங்கள் " என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார் ?

1563

66.    1739 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசிய அதிகாரம் எந்த பகுதியுடன் சுருங்கி நின்று போனது?

  கோவா ,டையூ, டாமன்

67.    போர்த்துக்கீசிய அதிகாரம் படிப்படியாக யாரிடம் வீழ்ச்சியடைந்தது?

டச்சுக்காரர்கள்

68.    எந்த ஆண்டு நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது ?

 1602

69.     டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை எந்த இடத்தில் நிறுவினர்?

 மசூலிப்பட்டினம்

70.    டச்சுக்காரர்கள் எந்த ஆண்டு போர்ச்சுகீசியர்களிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேஷிய தீவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர்?

1605

71.    டச்சுக்காரர்கள் யாரிடமிருந்து நாகப்பட்டினத்தை கைப்பற்றி தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர் ?

போர்த்துகீசியர்

72.     ஆரம்பத்தில் டச்சுக்காரர்களின் தலைநகரமாக இருந்தது எது ?

 பழவேற்காடு (புலிக்காட்)

73.    எந்த ஆண்டு டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் இருந்து தங்களது தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர் ?

 1690

74.     டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்கள் என்னென்ன?

பட்டு ,பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி

75.      இந்தியாவிலிருந்த டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்கள் என்னென்ன ?

பழவேற்காடு, சூரத்,சின்சுரா, காசிம்பஜார்,பாட்னா, நாகப்பட்டினம் , பாலசோர் மற்றும் கொச்சின்

76.    அம்பாய்னா படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?

 1623

77.     அம்பாய்னா படுகொலையில் 10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்களை கொன்றவர்கள் யார்?

டச்சுக்காரர்கள்

78.    பெடரா போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

 1759

79.     பெடரா போரில் டச்சுக் காரர்களை தோற்கடித்தவர்கள் யார்?

ஆங்கிலேயர்கள்

80.    டச்சுக்காரர்கள் எந்த ஆண்டு முழுமையாக தங்களது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்?

1795

81.    எந்த ஆண்டு பழவேற்காட்டின் மீது தங்களது கட்டுப்பாட்டை போர்ச்சுகீசியர்கள் ஏற்படுத்தினர் ?

 1502

82.    கெல்டிரியா கோட்டை யாரால் கட்டப்பட்டது?

டச்சுக்காரர்கள்

83.     கெல்டிரியா கோட்டை டச்சுக்காரர்களால் எப்போது எங்கு கட்டப்பட்டது?

பழவேற்காடு ,1613

84.    வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு எந்த இடத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது ?

 பழவேற்காடு

85.      டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள் என்ன?

நாகப்பட்டினம் ,புன்னக்காயல் ,பரங்கிப்பேட்டை (potonova),கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம்

86.   ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் எப்போது அனுமதி பட்டயம் வழங்கினார்?

டிசம்பர் 31 ,1600

87.     ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி எத்தனை இயக்குனர்களை கொண்டிருந்தது?

ஒரு கவர்னர் மற்றும் 24 இயக்குனர்கள்

88.     எந்த ஆண்டு ஜஹாங்கிர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகள் பெற அனுப்பிவைக்கப்பட்டார்?

1608

89.    வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நகரில் ஒரு வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார் ?

சூரத்

90.    யாருடைய தலையீட்டால் ஜஹாங்கீர் சூரத் நகரில் வணிக மையம் அமைக்க அனுமதி அளிக்கவில்லை ?

போர்ச்சுகீசியர்கள்

91.     சூரத் அருகே நடைபெற்ற கடற்போரில் எந்த ஆங்கிலத் தளபதி போர்ச்சுகீசிய கடற்படையை தோற்கடித்தார்?

தாமஸ் பெஸ்ட்

92.     எந்த ஆண்டு சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க ஜஹாங்கீர் அனுமதி அளித்தார் ?

 1613

93.    ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமை வர்த்தக மையமாக இருந்தது எது?

 சூரத்

94.   1614ல் எந்த கேப்டன் போர்ச்சுகீசியரை வென்றார் ?

நிக்கோலஸ் டவுண்டன்

95.   எந்த ஆண்டு ஜஹாங்கிர் அவைக்கு சர் தாமஸ் ரோ வருகை தந்தார் ?

 1615

96.    1615ல் ஜஹாங்கிர் அவைக்கு யாரால் சர் தாமஸ் ரோ அனுப்பி வைக்கப்பட்டார் ?

இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ்

97.    சர் தாமஸ் ரோ எங்கு இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்?

 ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச்

98.      ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் வர்த்தக மையத்தை எங்கு எப்போது நிறுவினர்?

 மசூலிப்பட்டினம் (1611)

99.   மசூலிப்பட்டினம் எந்த அரசினுடைய முக்கிய துறைமுகமாகும்?

கோல்கொண்டா அரசு

100.          எந்த ஆண்டு பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் இருந்து குத்தகைக்கு பெற்றார்?

 1639

101.  சென்னையில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி எந்த வணிக மையத்தை நிறுவியது ?

புனித ஜார்ஜ் கோட்டை

102.  இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் யாரை திருமணம் செய்து கொண்டார்?

போர்ச்சுகீஸ் இளவரசி காத்தரின்

103.  இரண்டாம் சார்லஸ் மற்றும் கேத்தரின் திருமண சீராக எந்த தீவை போர்த்துகீசிய  மன்னரிடம் இருந்து பெற்றார்?

 பம்பாய் தீவு

104.  எந்த ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பம்பாய் தீவை ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பெற்றது?

1668

105.     1690 ஆம் ஆண்டு எந்த இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது?

 சுதாநுதி

106.சுதாதுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களில் ஜமீன்தாரி உரிமையை எந்த ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பெற்றது ?

 1698

107.   சுதாதுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்கள் பின்னாட்களில் என்ன நகரமாக வளர்ச்சி பெற்றது?

கல்கத்தா

108. எந்த ஆண்டு சுதாநுதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது?

 1696

109.  சுதாநுதியில் கட்டப்பட்ட கோட்டை  எந்த ஆண்டு முதல் வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது?

 1700

110.   எந்த போருக்கு பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக மாறியது ?

 பிளாசிப் போர் மற்றும் பக்சார் போர்

111.   பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

 1757

112.   பக்சார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

1764

113.   இந்தியா எந்த ஆண்டு வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது?

 1858

114.  டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 

மார்ச் 17 ,1616

115.    டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை ஒரு பட்டயத்தை வெளியிட்டு உருவாக்கியவர் யார் ?

டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன்

116.  டேனியர்கள் எந்த ஆண்டு தரங்கம்பாடியில் தங்களது வணிக குடியேற்றத்தை நிறுவினர் ?

1620

117.  டேனியர்கள் எந்த ஆண்டு செராம்பூரில்(வங்காளம்) தங்களது வணிக குடியேற்றத்தை நிறுவினர் ?

1676

118.  டேனியர்களின் இந்திய தலைமையிடமாக இருந்தது எது ?

 செராம்பூர்

119.  எந்த ஆண்டு டேனியர்கள் இந்தியாவில் இருந்த தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்?

 1845

120. தரங்கம்பாடியை டேனியர்கள் எவ்வாறு அழைத்தனர்?

டானஸ்பெர்க்

121.  தரங்கம்பாடியில் ஓர் அச்சுக் கூடத்தை நிறுவியவர் யார் ?

 சீகன்பால்கு 

122.    பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது?

பிரஞ்சு மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் ,1664

123.   எந்த ஆண்டு பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது?

1667

124. இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளில் கடைசி ஐரோப்பிய நாடு எது?

 பிரான்ஸ்

125.   இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் யார்?

கரோன் ,சூரத்

126. மார்காரா,கோல்கொண்டா சுல்தானின் அனுமதிபெற்று எந்த ஆண்டு பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்?

 1669

127.  1673ல் பீஜப்பூர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ் யார் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார் ?

 மார்ட்டின்

128. செயின்ட் லூயிஸ் கோட்டை எங்கு கட்டப்பட்டது?

பாண்டிச்சேரி

129. செயின்ட் லூயிஸ் கோட்டையை கட்டியவர் யார் ?

பிரான்காய்ஸ்மாட்டின்

130.  வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஷ்டகானின் அனுமதி பெற்று எந்த ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கொல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்து?

 1673

131.  பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் எந்த இடங்களில் வணிக குடியேற்றங்களை நிறுவியது ?

 மாஹி,காரைக்கால் ,பாலசோர் மற்றும் காசிம் பஜார்

132.  எந்த ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமிக்கப்பட்டார்?

 1742 

133.   டியூப்ளேவிற்கு பிறகு பிரெஞ்சு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

 டூமாஸ்

134.  சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு யாரால் நிறுவப்பட்டது?

 1731 ஜோதன்பர்க்

 

Post a Comment

Previous Post Next Post